சென்னை: தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 9) பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளுடன் தொடங்கி யுள்ளன. தேர்வுகளில் எவ்வித முறைகேடு ஏற்படுவதை தடுக்க, கண்காணிப்பு பணிகளில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடப்பு கல்வியா ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 7,99,892 மாணவ-மாணவிகளும், 26,441 தனித் தேர்வர்களும் என மொத்தம் சுமார் 8.26 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 4,221 பள்ளிகளில் தேர்வு மையங்கள் […]