BCCI Annual Player Contracts: இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் ஆண்டுதோறும் வருடாந்திர வீரர் தக்கவைப்பு பட்டியலை வெளியிடும். அந்த வகையில், 2025-26 சீசனுக்கான இந்திய சீனியர் ஆண்கள் மற்றும் சீனியர் பெண்களுக்கான வருடாந்திர வீரர் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று வீரர்கள் மட்டுமே கிரேடு ஏ-வில் இடம் பிடித்துள்ளனர். அதாவது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தி வரும் கேப்டன் சுப்மன் கில், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Add Zee News as a Preferred Source
பின்னுக்கு தள்ளப்பட்ட ரோகித், கோலி
இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கிரேடு பி-யில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருவதால் அவர்கள் இந்த கிரேடு பி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கிரேடு விவரம்
கிரேடு ஏ: சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேடு பி: வாஷிங்டன் சுந்தர், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்
கிரேடு சி: அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னாய், ருதுராஜ் கெய்க்வாட்.
இதேபோல் சீனியர் பெண்களுக்கான வருடாந்திர வீராங்கனை பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
கிரேடு ஏ: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா
கிரேடு பி: ரேணுகா தாக்கூர், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், சினே ராணா
கிரேடு சி: ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், பிரதிகா ராவல், கிராந்தி கவுட், உமா செட்ரி, அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரணி, யாஸ்டிகா பாட்டியா, ஹர்லீன் தியோல், காஷ்வீ கௌதம், ஜி. கமலினி, வைஷ்ணவி ஷர்மா, தேஜல் ஹசாப்னிஸ்.
About the Author
R Balaji