2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் வென்றது. இத்தொடரை வென்றதை அடுத்து, ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி தற்போது டி20 உலகக் கோப்பையிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
Add Zee News as a Preferred Source
ரோகித்துக்கு பின் சூர்யகுமார் யாதவ்
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என சொல்லும் அளவிற்கு அணியை கட்டமைத்துள்ளார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின், இந்திய அணி ஒரு டி20 தொடரில் கூட தோல்வி அடையவில்லை. இந்த நிலையில், பயிற்சியாளர் கெளதம் கம்பீர் சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த கேப்டன் என கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர் பாராட்டு
இது தொடர்பாக பேசிய பயிற்சியாளர் கெளதம் கம்பீர், சூர்யகுமார் யாதவ் டி20ல் எனது பணியை எளிதாக்கி உள்ளார். அவர் ஒரு சிறந்த கேப்டன், அவர் களத்தில் என்ன செய்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக எப்படி இருக்கிறார் என்பது அல்ல. அவர் அணி வீரர்களுடன் எப்படி பழகும் விதம், அவர்களுடன் நேரத்தை செலவிடும் விதம், மைதானத்தில் அவரது நிதானமே அவரை ஒரு சிறந்த கேப்டனாக காட்டுகிறது.
சூர்யகுமார் யாதவ் சிறந்த கேப்டன்
இது உங்களை மற்ற விஷயங்களை பற்றி சிந்திக்க உதவுகிறது. அந்த மாதிரியான ஒரு சூழலை அவர் உருவாக்கி இருப்பார். அவர் அனைத்தையும் டிக் செய்துள்ளார். அவர் எனது பணியை எளிதாக்கி உள்ளார். சூர்யாகுமார் யாதவ் ஒரு அற்புதமான கேப்டன். அவர் போன்ற ஒருவர் நாட்டின் அணியை வழிநடத்துவது சிறந்த விஷயம். குறிப்பாக அணி அழுத்தத்தில் இருக்கும்போது அவர் சரியான முடிவை எடுப்பார் என கம்பீர் அவரை பாராட்டி உள்ளார்.
நமீபியாவுடன் அடுத்த போட்டி
டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் அமெரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் நிதானமாக களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அப்போட்டியில் அவர் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக இந்திய அணி நமீபியா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அப்போட்டியில் நாளை மறுநாள் (பிப்ரவரி 12) டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji