இந்தியாவின் டி20 கிரிக்கெட் அணி கடந்த ஓரண்டுக்கு மேலாக சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்ற பின்னர் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பிறகு இந்திய அணி எந்த டி20 தொடரிலும் தோற்கவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்திய அணி நல்ல பலத்துடன் இருப்பதால், மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளது.
Add Zee News as a Preferred Source
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 300 தொடுமா?
அதிலும் இந்திய அணி டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக அதிரடியான ஆட்டத்தை கையாள்வதால், உலகக் கோப்பை தொடரில் 300 ரன்களை குவிக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது. மற்ற அணிகளும் இந்திய அணியை பார்த்து வியந்து போய் உள்ளனர். கடந்த சில தொடர்களில் இந்திய அணி முதல் போட்டிங் செய்யும் பட்சத்தில் 270, 240 போன்ற பெரிய ஸ்கோர்களை எட்டி வருகின்றனர். இதுவே மற்ற அணிகள் வியந்து பார்ப்பதற்கு காரணம். சில வீரர்கள் உலகக் கோப்பை குறித்து பேசுகையில் கூட, கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நிச்சயம் இந்திய அணியை தாண்டியாக வேண்டும் என கூறி உள்ளனர்.
இலங்கை வீரர் சர்ச்சை கருத்து
இந்த நிலையில், இலங்கை அணியின் வீரர் பனுகா ராஜபச்சே, இந்திய அணி பேட்டர்கள் பயன்படுத்தும் பேட்டில் ரப்பர் இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இவரது கருத்துதான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளை மற்ற அணி வீரர்கள் வெளிநாடுகளில் வாங்க முடியாது. அந்த பேட்டுகள் அவர்களுக்கென்றே தயாரிக்கப்படுகிறது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் இவ்வளவு சிறப்பாக விளையாடுகின்றனர். அவர்களது அதிரடிக்கு அதுதான் காரணம்.
இந்திய வீரர் பேட்டில் ரப்பர்
அவர்கள் பயன்படுத்தும் பேட்டில் ரப்பர் இணைக்கப்படுகிறது. அதுபோன்ற பேட்டுகளை மற்ற அணி வீரர்களால் வாங்க முடியாது. அவர்கள் எப்படி இந்த மாதிரியான ஒரு அதிரடியான ஆட்டத்தை விளையாட முடியும் என தெரியவில்லை என கூறி உள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதுமா?
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஏ குரூப்பில் உள்ளது. அதேசமயம் இலங்கை அணி பி குரூப்பில் உள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளும் மோதும் வாய்ப்பு சூப்பர் 8 சுற்றில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி
தசுன் ஷனக (கேட்ச்), பாத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரனா, துஷ்மந்த சமீரனா.
About the Author
R Balaji