சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் – வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இவர்கள் சென்னை அண்ணாநகரில் குடியிருந்து வருகின்றனர். படிப்புக்காக லண்டனுக்குச் சென்ற கிஷிதிஜ், சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்த நிலையில், பிப்ரவரி 9-ம் தேதி நீராஜ் ஜெயின் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சோனாலியும் அவரின் மகனும் இருந்தனர். நீராஜ் ஜெயினுக்கு போன் செய்த சோனாலி, நானும் கிஷிதிஜ்ஜிம் விஷம் குடித்துவிட்டோம் எனக் கூறி, இணைப்பை துண்டித்திருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீராஜ் ஜெயின், வீட்டு வந்திருக்கிறார். அப்போது இருவரும் வீட்டுக்குள் மயங்கி கிடந்தனர். உடனே இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார் நீராஜ் ஜெயின்.

தற்கொலை
தற்கொலை

சோனாலியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிஷிதிஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குளுக்கோஸில் விஷம் கலந்து குடித்து தாயும் மகனும் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி இருவரும் விஷம் குடித்ததில் சோனாலி உயிரிழந்துவிட்டார். இவர்களின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

லண்டனிலிருந்து ஊர் திரும்பிய சில தினங்களில் இந்த விபரீத முடிவை தாயும் மகனும் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.