பாதிக்கு பாதி வரை தள்ளுபடி.. iPhone 17 Pro Max வாங்க இதுதான் சரியான நேரம்

iPhone 17 and iPhone 17 Pro Max Discount Price In India: இன்னும் சில நாட்களில் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பிப்ரவரி 14 காதலர்களாக இருப்பவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். பலர் அன்றைய நாளில் தாங்கள் விரும்புவோரிடம் காதலை சொல்லி வெற்றிகரமாக காதல் வாழ்க்கையை துவங்குவார்கள், ஒரு சிலர் தங்களின் அன்புக்குரியவர்களை கவரும் விதமாக பல பரிசுகளை கொடுத்து இந்நாளை கொண்டாடுவார்கள். நீங்கள் என்ன பரிசு தர வேண்டும் என்கிற யோசனையில் இருக்கிறீர்கள் என்றால், பிரிமியம் தொலைபேசியை பரிசளிக்கலாம். தற்போது iPhone 17 Pro Max போனில் யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே iPhone 17 Pro Max போனில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, புதிய விலை என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

iPhone 17 Pro Max 256 ஜிபி மாடல் தற்போது அமேசான் தளத்தில் ரூ. 1,49,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்போது இதில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ. 7,495 வரை கேஷ்பேக் பெறலாம். இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறுவார்கள். அதன்படி ரூ. 48,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். உங்களின் ஃபோன் நல்ல நிலையில் இருந்தால் முழுமையான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் நீங்கள் பெற்று, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போனை பாதிக்கு பாதி விலையில் வாங்கலாம்.

iPhone 17 Pro Max போனின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஆப்பிள் இந்த போனின் செயல்திறன் மற்றும் டிஸ்ப்ளேவில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இது 6.9-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷனை மென்மையாகக் காட்ட உதவுகிறது. இந்த போனில் ஆப்பிள் A19 ப்ரோ சிப் மற்றும் 12GB ரேம் உள்ளது. கூடுதலாக, சேமிப்பு விருப்பங்கள் பொறுத்த வரை, இதில் 256GB, 512GB மற்றும் 1TB ஸ்தவரகே விருப்பம் உள்ளது.

இந்த போனின் பின்புறத்தில் மெயின், அல்ட்ரா-வைட் மற்றும் ஜூம் ஷாட்களுக்காக மூன்று 48MP கேமராக்கள் உள்ளன. மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, போனில் USB-C சார்ஜிங், MagSafe, 5G ஆதரவு, Wi-Fi 7, Face ID, அத்துடன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு ஆகியவை உள்ளன. இந்த போன் சமீபத்திய iOS பதிப்புடனும் வருகிறது, எனவே இது நீண்டகால மென்பொருள் ஆதரவைப் பெறும். 

இந்நிலையில் இந்தக் காதலர் தினத்தை முன்னிட்டு, உங்கள் காதலிக்கு iPhone 17 Pro Max வாங்கிக் கொடுக்க வேண்டுமென நினைத்திருந்தால், இப்போதே தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்யுங்கள்.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.