இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால வீரர்களை உருவாக்கும் இடமாக பெங்களூரில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது பயிற்சிகளை மேற்கொள்ளவோ அல்லது மறுவாழ்வுக்கு இந்த இடம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் பிரம்மாண்டமான வசதிகளை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், வீரர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கவும் பல்வேறு துறைகளில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. பிசிசியை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் சில பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கப்பட உள்ளனர். குறிப்பாக பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Add Zee News as a Preferred Source
News
BCCI invites applications for Coaching and Performance Staff positions at the Centre of Excellence.
The following positions are open for applications:
1. Batting Coach (2 positions)
2. Fast Bowling Coach (3 positions)
3. Fielding Coach (4 positions –…
— BCCI (@BCCI) February 9, 2026
காலியாக உள்ள முக்கிய பணியிடங்கள்
பேட்டிங் பயிற்சியாளர்கள்
தலைமை பயிற்சியாளருடன் இணைந்து செயல்பட வேண்டிய இந்த பதவிக்கு, பேட்டிங் நுணுக்கங்களை கற்றுத்தரும் நிபுணர்கள் தேவை. சீனியர் இந்திய அணி, இந்தியா ஏ அணி, ஜூனியர் மற்றும் மாநில வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது இவர்களது முக்கிய பணியாகும். தேசிய தேர்வாளர்கள் மற்றும் விளையாட்டு அறிவியல் நிபுணர்களுடன் இணைந்து, இந்தியாவின் அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன்களை கண்டறிந்து உருவாக்குவதே இவர்களது பிரதான இலக்கு.
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்கள்
வேகப்பந்து வீச்சாளர்களின் தொழில்நுட்பம், உத்தி மற்றும் உடல் தகுதி மேம்பாட்டில் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது மற்றும் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது இவர்களது பொறுப்பாகும். சீனியர் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு தேவையான தரமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவது இவர்களது கடமை.
ஃபீல்டிங் பயிற்சியாளர்கள்
நவீன கிரிக்கெட்டில் ஃபீல்டிங் மிக முக்கிய பங்காற்றுகிறது. வீரர்களின் சுறுசுறுப்பு, கேட்ச் பிடிப்பது, துல்லியமாக எறிவது போன்ற திறன்களை வளர்ப்பது இவர்களது பணி. விளையாட்டு அறிவியல் குழுவுடன் இணைந்து, வீரர்களின் உடல் தகுதிக்கு ஏற்ப ஃபீல்டிங் பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும்.
செயல்திறன் ஆய்வாளர்
இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பணியாகும். போட்டிகள் மற்றும் பயிற்சிகளின் போது சேகரிக்கப்படும் தரவுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க வேண்டும். விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ குழுவினருடன் இணைந்து, வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தத் தேவையான உத்திகளை வகுப்பது இவர்களது பொறுப்பு. தொழில்நுட்பம் சார்ந்த முடிவுகளை எடுக்க பயிற்சியாளர்களுக்கு இவர்கள் உதவுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான Google Forms பிசிசிஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அனைத்து பதவிகளும் பெங்களூருவில் உள்ள BCCI சிறப்பு மையத்தில் அமைந்துள்ளன. தேர்வு செய்யப்பட்டும் பயிற்சியாளர்கள், தனிப்பட்ட நேர்காணல்களுக்கு அழைக்கப்படுவார்கள்.
விவிஎஸ் லட்சுமணன்
இந்தியாவின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் இந்த சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவரது தலைமையில் இந்த மையம் வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளித்து வருகிறது. முன்பு பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மிகச்சிறிய இடத்தில் செயல்பட்டு வந்த இந்த சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ், தற்போது பெங்களூர் விமான நிலையத்தின் அருகில் மிகப்பெரிய இடத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வகையில் மைதானங்கள், நீச்சல் குளங்கள், தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு திறமையான பயிற்சியாளர்களையும் தற்போது பிசிசியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது..
ஏன் இந்த நியமனங்கள் முக்கியம்?
சமீபகாலமாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் அடிக்கடி காயங்களில் சிக்குவது பெரும் சவாலாக உள்ளது. பும்ரா, ஹர்திக், பண்ட் போன்ற வீரர்கள் நீண்ட கால காயத்தால் அவதிப்பட்டனர். இது போன்ற சூழலில், வீரர்களின் வொர்க் லோட் மேனேஜ்மென்ட் எனப்படும் பணிச்சுமையை நிர்வகிப்பதற்கும், காயமடைந்தவர்களை விரைவாக மீட்டெடுப்பதற்கும் ஒரு வலுவான மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியை உலகின் நம்பர் 1 அணியாக தக்கவைக்கவும், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இளம் வீரர்களை தயார்படுத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
About the Author
RK Spark