பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 5 வீரர்கள்! யார் தெரியுமா?

BCCI Central Contract 2026 Salary : இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் செயல்பாடு மற்றும் அவர்கள் விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் மத்திய ஒப்பந்தங்களை அறிவிக்கிறது. இதில் கிரேடு A,B,C ஆகிய அடிப்படையில் சம்பளங்கள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புதிய சம்பள பட்டியலை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இதில் சில வீரர்களுக்கு கூடுதல் சம்பளமும், சில வீரர்களுக்கு குறைவான சம்பளமும், சிலரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 30 ஆண்களும், 21 பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் இந்த சம்பளப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறை சம்பளப் பட்டியலில் இருந்த ஐந்து வீரர்கள் இந்த முறை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

Add Zee News as a Preferred Source

நீக்கப்பட்டுள்ள ஐந்து வீரர்கள் 

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் பட்டியலில் இருந்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பெரிதாக இடம் பெறவில்லை. கணுக்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் பழையபடி பந்து வீச முடியவில்லை. இதுவும் அவர் அணியில் இடம் பெறாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாத இஷான் கிஷன் தற்போது டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இவர்களை தவிர ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் கடன் முறை மத்திய ஒப்பந்தத்தில் இருந்த போதிலும், இந்த முறை நீக்கப்பட்டுள்ளனர். 

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 

கடந்த முறை A  + பிரிவில் இருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தற்போது கிரேட் B-க்கு மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இவர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் தற்போது, ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அனைத்து பார்மெட்டுகளிலும் விளையாடும் வீரர்களுக்கு தான் A பிரிவில் சம்பளம் வழங்கப்படும். இவர்கள் ஒரு பார்மட்டில் மட்டுமே விளையாடுவதால் தற்போது B-க்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் சுப்மன் கில் கிரேடு A பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் இந்த குழுவில் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் அணி

ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் முதன்முறையாக ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மகளிர் அணியை பொறுத்தவரை ஹர்மன்பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் குரூப் A அந்தஸ்தை தக்கவைத்துள்ளனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தால் பதவி உயர்வு பெற்றுள்ளார். 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.