2026 டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் 11வது போட்டியில் நியூசிலாந்து அணியும் யுஏஇ அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐக்கிய அமீரக அணியின் கேப்டன் முகமது வாசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Add Zee News as a Preferred Source
ஐக்கிய அரபு அமீரகம் vs நியூசிலாந்து
அதன்படி யுஏஇ அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது வாசீம் 66 ரன்களும், அலிசான் சரபு 55 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த நிலையில்தான், யுஏஇ கேப்டன் முகமது வாசீம் ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றை நெருங்கி வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக 66 ரன்கள் அடித்த முகமது வாசீம்
அதாவது, முகமது வாசீம் இப்போட்டியில், 66 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவை நெருங்கி வருகிறார். முகமது வாசீம் சர்வதேச டி20 போட்டிகளில் 205 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இந்த நிலையில், அதனை நெருங்கி வருகிறார் வாசீம்.
சர்வதே டி20ல் அதிக சிக்சர்கள் அடித்த முதல் மூன்று வீரர்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து முகமது வாசீம் 193 சிக்சர்கள் விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 173 சிக்சர்களுடன் உள்ளார்.
ரோகித் சர்மா சாதனையை முறியடிக்கப்போகும் முகமது வாசீம்
ரோகித் சர்மா கடந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றுவிட்டார். அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவை யுஏஇ கேப்டன் முகமது வாசீம் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வாய்ப்பு இந்த டி20 உலகக் கோப்பையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji