சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு? கடைசி நிமிடத்தில் நடந்த மாற்றம்! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியுள்ள டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் நாளை புதன்கிழமை நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங் ஆர்டரில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் காய்ச்சல் காரணமாக இந்திய அணியில் உள்ள சில வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

அபிஷேக் சர்மாவிற்கு ஓய்வு?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல் போட்டியின் போதும் இவருக்கு அதிகமான காய்ச்சல் இருந்தது என்றும், அதனுடன் தான் விளையாடினார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் அவர் 100% குடையமடையவில்லை என்பதால் நமீபியாவிற்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம். அபிஷேக் ஷர்மா பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை என்றால் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சாம்சனுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Sanju Samson during a practice session in Delhi ahead of the Namibia game in the T20 World Cup 2026.

He might get a chance to play if Abhishek Sharma doesn’t recover in time. pic.twitter.com/J5LG0odvXw

— Sonu (@Cricket_live247) February 10, 2026

பும்ரா இல்லை 

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதல் போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சிராஜ் களமிறங்கினார். தற்போது பும்ரா குணமடைந்து வந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இருப்பதால், நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா இடம் பெறுவது சந்தேகமே. அவர் முழுமையாக குணமடையாத பட்சத்தில் ஓய்வு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. பும்ரா விளையாடவில்லை என்றால் சிராஜ் மற்றும் அரஸ்தீப் சிங் வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார்கள்.

டெல்லி ஆடுகளம் எப்படி?

டெல்லி அருண் ஜெட்லி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானது. அதே சமயம், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இங்கு நல்ல உதவி கிடைக்கும். எனவே, இந்திய அணியில் குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. நமீபியா அணி பலவீனமாக தெரிந்தாலும், டி20 கிரிக்கெட்டில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே, இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கி, பெரிய வெற்றியை பதிவு செய்து ரன் ரேட்டை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கும்.

இந்திய அணி Playing XI

இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.