IND vs NAM: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. 2 மாற்றங்கள்! முக்கிய அதிரடி வீரர் விலகல்

T20 World Cup 2026: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2026 டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. பிப்., 07ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அமெரிக்காவின் பந்து வீச்சில் சற்று தடுமாறிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டுமே சிறப்பான பேட்டிங் செய்தார். அவர் 84 ரன்களை எடுத்திருந்தார். 

Add Zee News as a Preferred Source

இந்தியா vs நமீபியா 

இதையடுத்து 162 ரன்கள் இலக்கை துரத்திய அமெரிக்கா அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த சூழலில், நாளை (பிப்ரவரி 12) இந்திய அணி நமீபியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டியானது நடைபெறுகிறது. நாளைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் சில மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். 

இந்திய அணியின் பிளேயிங் 11

நாளைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று தொடக்க வீரரான அபிஷேக் சர்மா வெளியேறி அவரது இடத்தில் சஞ்சு சாம்சனை விளையாடுவார் என்று தெரிகிறது. மற்றொன்று முகமது சிராஜ் வெளியேறி ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என தெரிகிறது. 

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு 

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே காச்சலுடன் விளையாடியதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். இதையடுத்து அவர் கடும் வயிற்று பிரச்சனையால் அவதிபட்டு வந்ததாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் குணமடையும் பட்சத்தில் மீண்டும் அணிக்கு திரும்புவார் இல்லை என்றால், தொடரை விட்டு விலகும் அபாயம் உள்ளது. எனவே அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவார். 

உள்ளே வரும் ஜஸ்பிரித் பும்ரா 

அதேபோல் முதல் போட்டியின்போது ஜஸ்பிரித் பும்ராவும் சற்று உடல் நல பிரச்சனை ஏற்பட்டதால், அவர் அப்போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடினார். இந்த சூழலில், அவர் நமீபியாவுக்கு எதிராக விளையாட உள்ளார். அவர் விளையாடும் நிலையில், முகமது சிராஜ் பெஞ்சில் அமருவார் என தெரிகிறது. இதை தாண்டி இந்திய அணியின் பிளேயிங் 11ல் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ வாய்ப்பில்லை என தெரிகிறது. 

நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.