டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி கோலாகமலாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடி அந்த அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த சூழலில், நாளை (பிப்ரவரி 12) மாலை நமீபியாவுக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியை விளையாடி உள்ளது. இப்போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை
இப்போட்டியை அடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. முதலில் இப்போட்டி நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது. இரு அணிகளும் அதற்காக தயாராகி வருகிறது. சமீப காலமாக இந்திய அணி நல்ல பலத்துடன் அசத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி கடுமையாக சொதப்பி வருகிறது. இதனால், இப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எளிதில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியை அவ்வளவு எளிதில் வெற்றி பெற விட மாட்டோம் என பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் பேசி இருக்கிறார். இது ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவை எளிதாக வெல்ல விட மாட்டோம்
இது தொடர்பாக பேசிய ஃபர்ஹான், இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றாலே நாங்கள் பெரிதாக எதையும் நினைக்க மாட்டோம். எங்களுக்கு மற்ற போட்டியை போல இதுவும் ஒரு சாதாரண போட்டியே. இப்போட்டி நிச்சயம் ஒருபக்கமாக இருக்காது. குறிப்பாக இந்தியாவின் பக்கம் வெற்றி முழுமையாக செல்லாது. நாங்கள் அவ்வளவு எளிதில் அவர்களை வெற்றி பெற விட மாட்டோம் என கூறி உள்ளார்.
ஃபர்ஹானின் இந்த கருத்து ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ரசிகர்கள் சிலர் பாகிஸ்தானை இந்திய அணி எளிதாக வெல்லும் என கூறி வருகின்றனர். அதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து இரண்டாவது போட்டியில் அமெரிக்கா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
பாகிஸ்தான் அணி
சல்மான் ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா நஃபே, முகமது நவாஸ், சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
About the Author
R Balaji