IND vs PAK போட்டியின் போது வீரர்கள் கைகுலுக்குவார்களா? ICC-PCB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

India vs Pakistan Match: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் ஆரம்பத்தில் புறக்கணிக்க முடிவு செய்திருந்தது, ஆனால் ஐசிசி (ICC) மற்றும் பாகிஸ்தான் அரசுடன் நடத்திய தீவிரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான்

வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக ஆரம்பத்தில் கூறியது. வங்கதேசம் என்ற போர்வையில் பாகிஸ்தான், இந்தியாவை சிக்க வைக்க எல்லா வழிகளிலும் முயன்றது. ஆனால் அவர்களுக்கு யாரும் ஆதரவு கரம் நீட்டாததால், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டது. 

இந்தியா பாகிஸ்தான் போட்டி கைகுலுக்கல் சர்ச்சை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்குவார்களா என்பது அனைவரின் மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது.

கைகுலுக்கல் விவகாரத்தில் ஐசிசி (ICC) எடுத்துள்ள முடிவு என்ன?

லாகூரில் நடந்த ஐ.சி.சி உடனான சந்திப்பில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்திருந்தது. ஆனால் தற்போது வெளிவரும் தகவல்களின்படி, பாகிஸ்தான் வாரியத்தின் இந்த நிபந்தனையை ஐ.சி.சி புறக்கணித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நிபந்தனை அவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மாட்டார்கள் எனத் தெளிவாகிறது.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கைகுலுக்க மறுப்பு ஏன்?

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் கைகுலுக்கக் கூடாது என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினார். இந்த நடைமுறை பல்வேறு போட்டிகளில் தொடர்ந்தது. பெண்கள் உலகக் கோப்பை, ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையிலும் கைகுலுக்கி கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை ஒரு பெரிய பிரச்சினையா உருவாக்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது, ஆனால் விதியின் படி, வீரர்களை கைகுலுக்க கட்டாயப்படுத்த முடியாது என்பது குறிப்பிடடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க பிசிசிஐ தடை விதித்துள்ளதா?

பாகிஸ்தான் அணியுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறிவரும் நிலையில், இது குறித்து பிசிசிஐ (BCCI) தரப்பில், “மைதானத்தில் கைகுலுக்குவது என்பது ஒரு நற்பண்பு சார்ந்த நடைமுறையே தவிர, அது கிரிக்கெட் விதிமுறைப் புத்தகத்தில் கட்டாயமான சட்டம் கிடையாது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்த முக்கியத் தகவல்கள்:

போட்டி நடைபெறும் தேதி: பிப்ரவரி 15, 2026 (ஞாயிற்றுக்கிழமை).

இடம்: ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை.

குழு விவரம்: இந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் குழு ஏ (Group A) பிரிவில் இடம் பெற்றுள்ளன. இவர்களுடன் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் அதே குழுவில் உள்ளன.

About the Author


Shiva Murugesan

Shiva Murugesan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.