இந்தியாவுக்கு தொடர் வெற்றிகள்… பாகிஸ்தான் போட்டிக்கு செய்ய வேண்டியது என்ன?

India vs Namibia 2026 Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் நமீபியா அணி 116 ரன்களில் ஆல்-அவுட்டானது. 

Add Zee News as a Preferred Source

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – நமீபியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அபிஷேக் சர்மா, சிராஜ் ஆகியோருக்கு பதில் சஞ்சு சாம்சன் மற்றும் பும்ரா ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். 

209 ரன்களை குவித்த இந்திய அணி

பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்களை குவித்தார். அதில் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடக்கம். தொடர்ந்து இஷான் கிஷனும் பவர்பிளேவில் அதிரடி காட்டினார். 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் எடுத்து 86 ரன்களை இந்திய அணி பதிவு செய்தது. இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரும் 24 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர் உடன் 61 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 12(13), திலக் வர்மா 25(21) ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா – தூபே ஜோடி 81 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 52 ரன்களை குவித்தார். தூபே 23 ரன்களை அடித்து ரன்-அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது. கேப்டன் எராஸ்மஸ் மட்டும் 4 ஓவர்களில் 20 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்டியா 

நமீபியா அணியோ 18.2 ஓவர்களில் 116 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. இதனால், 93 ரன்கள் வித்தியாசத்திலக் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட், அக்சர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டை எடுத்தனர். பேட்டிங்கில் 52 ரன்களை அடித்து, பந்துவீச்சில் 2 விக்கெட்டை  எடுத்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்திய அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Biggest win margin for #TeamIndia by runs in ICC Men’s #T20WorldC

The #MenInBlue beat Namibia by  victories in a row!

https://t.co/SQLoaZjq98#INDvNAM pic.twitter.com/b0PL2LLSbI

— BCCI (@BCCI) February 12, 2026

இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

இந்திய அணி தொடர்ந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திணறி வருகிறது. அதுவும் இன்று எராஸ்மஸின் ஸ்லிங் ஆக்சன் பந்துவீச்சுக்கு இந்திய அணி பேட்டர்கள் தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். 6 ஓவர்கள் வரை பட்டாசாக வெடித்த இந்திய அணி பேட்டர்கள், சுழற்பந்துவீச்சு அட்டாக் வந்ததும் பொட்டிப் பாம்பாக அடங்கியது. அடுத்து கொழும்புவில் பெரிய மைதானமான பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை தாக்க குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்கும் என்பது பலரும் அறிந்தது. ஆனால், அதேநேரத்தில் பாகிஸ்தானின் அதிரடியாக சுழற்பந்துவீச்சு அட்டாக்கை எதிர்கொள்ளும் விதமாக இந்திய அணி சிறப்பாக தயாராக வேண்டும். குறிப்பாக, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் உள்ளிட்டோரின் 8 ஓவர்களை இந்திய அணி சிறப்பாக விளையாடிவிட்டால் இந்திய அணி நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்திவிடும்.

மேலும் படிக்க | IND vs NAM: இந்திய அணியில் அபிஷேக் சர்மா இல்லை… பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவாரா?

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகும் முக்கிய கேப்டன்? இணையும் புதிய வீரர்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.