இந்தியா – நமீபியா போட்டி.. பும்ரா விளையாடுவாரா? கம்பீரின் திட்டம் என்ன?

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 15 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12) 3 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் இந்தியா – நமீபியா போட்டி இடம் பெற்றிருக்கின்றன. 

Add Zee News as a Preferred Source

இன்று இந்தியா – நமீபியா போட்டி 

முதல் போட்டியாக இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கின்றன. இதையடுத்து நேபால் மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன. இப்போட்டிகள் முறையே காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு முறையே நடைபெறுகின்றன. இரவு 7 மணி அளவில் இந்தியா – நமீபியா அணிகள் விளையாடும் போட்டி தொடங்குகின்றன. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில்தான், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளன. ஜஸ்பிரித் பும்ரா காய்ச்சல் காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இந்த சூழலில், காய்ச்சலில் இருந்து மீண்டு பயிற்சியினையை மேற்கொண்டார். 

நமீபியா போட்டியில் பும்ரா விளையாடுவாரா? 

அதேபோல் இன்றும் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அவர் இந்திய அணியின் பிளேயிங் 11ல் இடம் பெறுவார் என தெரிகிறது. அப்படி பும்ரா பிளேயிங் 11ல் இடம் பெறும் பட்சத்தில் கடந்த போட்டியில் அவரது இடத்தில் விளையாடிய முகமது சிராஜ் பெஞ்சில் அமருவார் என தெரிகிறது. 

இந்திய அணியின் திட்டம் என்ன? 

ஒருவேளை பும்ராவுக்கு இப்போட்டியிலும் விளையாடவில்லை என்றால், அவர் நிச்சயமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவது உறுதியாகிவிடும். இந்த திட்டத்தையும் இந்திய அணி நிர்வாகம் வைத்திருக்கலாம். ஏனென்றால், பாகிஸ்தான் ஓரளவு பெரிய அணி என்பதால், அவரை அங்கு பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சியாளர் கம்பீர் யோசிக்கலாம். 

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா விளையாடி அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ அல்லது மீண்டும் உடல் நல பிரச்சனை ஏற்பட்டாலோ பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போகும். இது பாகிஸ்தானுக்கு ஒரு சாதகமாக அமையும் என்பதால், இந்திய அணி இப்படியும் யோசிக்கலாம். எனவே பும்ரா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டாலும் அவர் இப்போட்டியில் விளையாடுவாரா என்பது இன்று இரவு போட்டியின்போதுதான் தெரியும்.  

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.