இந்திய அணியின் மற்றொரு வீரருக்கும் காயம்.. பயிற்சியின்போது அதிர்ச்சி! இன்றைய போட்டியில் விளையாடுவாரா?

2026 டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வரும் இத்தொடர் மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடு வருகிறது. கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியே மீண்டும் இத்தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இந்திய அணியில் அடுத்தடுத்து காயம் 

ஏற்கனவே திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகி இருந்தனர். இதனால் அவர்கள் நியூசிலாந்து தொடரை தவர விட்டனர். இந்த சூழலில், திலக் வர்மா டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு திரும்பினார். இதையடுத்து தற்போது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி திரும்பி உள்ளார். இதற்கிடையில், உலகக் கோப்பையின் பயிற்சி போட்டியின்போது, ஹர்ஷித் ராணா காயம் காரணமாக தொடரைவிட்டு வெளியேறினார். 

முதல் போட்டியில் காய்ச்சல் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. வயிற்று பிரச்சனையுடன் விளையாடிய அபிஷேக் சர்மா நமீபியா போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 11) இஷான் கிஷனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நமீபியா போட்டியில் அவரால் விளையாட முடியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இஷான் கிஷனுக்கு பயிற்சியின்போது காயம் 

இன்று (பிப்ரவரி 12) இந்தியா – நமீபியா அணிகளுக்கு இடையே டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், நேற்று பயிற்சியின்போது இஷான் கிஷனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதாவது, இஷான் கிஷன் பேட்டிங் செய்ய அவருக்கு பும்ரா பந்து வீசி பயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.

நமீபியா போட்டியில் விளையாடுவாரா?

அப்போது, ஜஸ்பிரித் பும்ரா யாக்கர் வைக்க, அது இஷான் கிஷனின் காலில் பட்டது. இதில் வலியால் துடித்த அவருக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி செய்தனர். இதன் காரணமாக அவர் இன்றைய நமீபியா போட்டியில் விளையாடுவாரா அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், இஷான் கிஷனுக்கு ஒருவேளை ஓய்வளித்தால், அவருக்கு பதிலாக விளையாடப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.