டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இத்தொடரில் கடைசி வரை போராடி கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
Add Zee News as a Preferred Source
ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு
இந்த எதிர்பார்ப்பில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியும் உள்ளது. ஆனால் இத்தொடர் தொடக்கத்தின் முதலே ஆஸ்திரேலியா அணிக்கு தொடர்ந்து பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. முதலில் அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் அதிரடி பேட்டர் டிம் டேவிட் விலகினார். இந்த சூழலில், அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷும் இடுப்பு காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டிரவிஸ் ஹேட் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தினார்.
மிட்செல் மார்ஷும் விலக வாய்ப்பு
இருப்பினும் அவர் இரண்டாவது போட்டிக்குள் குணமடைந்து அப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவக்குழு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் அடுத்த சில போட்டிகளிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மாற்றாக ஸ்டீவ் ஸ்மித் வருகிறார் என்றும் அவர் விரைவில் ஆஸ்திரேலிய அணியுடன் இணைய உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்
எனவே ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவார் என தெரிகிறது. மேலும், அவர் ஆஸ்திரேலியா அணியுடன் இணைவது அந்த அணி கூடுதல் பலம் என்பதில் சந்தேகம் இல்லை. முன்னதாக அவர் பிக் பாஷ் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிய்ப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
About the Author
R Balaji