ICC T20 World Cup 2026, Abhishek Sharma Health Updates: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
Add Zee News as a Preferred Source
குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அணிகளை வென்று, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அமெரிக்கா உடன் மோதி வெற்றிபெற்று 2வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி பாகிஸ்தான் உடன் தோற்றாலும் நமீபியாவுக்கு எதிராக வென்று 3வது இடத்தில் உள்ளது. நமீபியா ஒரு தோல்வியுடன் 4வது இடத்திலும், அமெரிக்க அணி 2 தோல்விகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்
இதையொட்டி, ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – நமீபியா அணிகளுக்கு (India vs Namibia) இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சிராஜ், அபிஷேக் சர்மாவுக்கு பதில் பும்ரா மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை என்றும் அவர் ஓரிரு போட்டிகளை தவறவிடக்கூடும் என்றும் சூர்யகுமார் யாதவ் டாஸின் போது தெரிவித்துள்ளார்.
Here is a look at #TeamIndia’s Playing XI for
Updates https://t.co/SQLoaZjq98#T20WorldCup | #MenInBlue | #INDvNAM pic.twitter.com/Ah1xPZAxZ6
— BCCI (@BCCI) February 12, 2026
பாகிஸ்தான் போட்டியில் வருவாரா அபிஷேக் சர்மா?
அபிஷேக் சர்மா நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டி இருப்பதால், அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வளிக்கவே இந்திய அணி விரும்பும். ஆனால், சூர்யகுமார் கூறியபடி பார்த்தால் அபிஷேக் அடுத்த போட்டியை கூட தவறவிட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
அபிஷேக் சர்மாவுக்கு என்ன நடந்தது?
இது ஒருபுறம் இருக்க, அபிஷேக் சர்மா வயிற்றில் தொற்று ஏற்பட்டது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. Times Of India வெளியிட்ட தகவலின்படி, மும்பையில் முதல் போட்டிக்கு முன்னதாக அபிஷேக் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோது பிரச்னை தொடங்கி உள்ளது. அபிஷேக் சர்மா சாப்பிட்ட ஏதோ ஒன்று, அவருக்கு வயிற்றில் பிரச்னையை உண்டாக்கி உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டி நடைபெற்ற அன்றும் அவருக்கு உடல்நிலை மோசமாகவே இருந்திருக்கிறது. இருப்பினும் அதையெல்லாம பொறுத்துக்கொண்டு அன்று பீல்டிங் செய்தார், முதலில் பேட்டிங் செய்து முதல் பந்திலேயே டக்-அவுட்டானார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
ஒரு கட்டத்தில் களத்தில் இருந்து பெவிலியன் திரும்பிய அபிஷேக் சர்மா, உடல்நிலை மேலும் மோசமானதால் போட்டிக்கு பின் எதிரணி வீரர்களுக்கு கைக்குழுக்க கூட வரவில்லை. வயிற்றில் தொற்று, வானிலை மாற்றம் காரணமாகவும் நிகழ்ந்திருக்கலாம். இதனால் காய்ச்சல் அதிகரித்திருக்கிறது, நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து உடலில் நீரிழப்பு மட்டுமின்றி உடல் எடையையும் சற்று இழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு இன்றைய போட்டியில் மட்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடைபெறும் பாகிஸ்தான் போட்டியில் அபிஷேக் சர்மா நிச்சயம் களமிறக்கப்படுவார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.
நமீபியா பிளேயிங் லெவன்: லூரன் ஸ்டீன்காம்ப், ஜான் பிரைலின்க், ஜான் நிகோல் லோப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(கேப்டன்), ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன்(விக்கெட் கீப்பர்), ரூபன் ட்ரம்பெல்மேன், மலான் க்ரூகர், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ, மேக்ஸ் ஹெய்ங்கோ.
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More