2025-ம் ஆண்டு யாத்திரை காலம் முடிந்த பின், வெள்ளியங்கிரி மலைப் பாதையில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளில் சுமார் 99% மறுசுழற்சி செய்ய முடியாதவை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், பக்தர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வனத்துறை தனது கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் 6.5 கி.மீ நீளமான நடைபாதையில் சிறப்பு தூய்மை பணிகளை மேற்கொண்டு, 2025-ல் மட்டும் 28 டன் கழிவுகளை […]