India vs Pakistan: டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேபால், இத்தாலி போன்ற சிறிய அணிகள் பெரிய அணிகளிடம் மல்லுக்கட்டுவது இந்த உலகக் கோப்பையை பார்ப்பதற்கு அழகாக்கி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில், இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது.
Add Zee News as a Preferred Source
பிப்ரவரி 7ஆம் தேதி தொடரின் முதல் நாளில் அமெரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இப்போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாறியது. இருப்பினும் கேப்டன் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அணிக்கு ரன்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த அமெரிக்க அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்களில் தோல்வியை தழுவியது.
பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான்
இதையடுத்து நேற்று (பிப்ரவரி 12) டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியா அணியுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் எடுத்தது. பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நமீபியா அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆகி 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நாளை மறுநாள் (பிப்ரவரி 15) பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இப்போட்டி இலங்கையின் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
அபிஷேக் சர்மா விலகல்? சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு
இப்போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இப்போட்டியில் இருந்தும் விலகும் வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவார். நமீபியா போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக விளையாடிய சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
பும்ரா விளையாடுவார்
அபிஷேக் சர்மாவை தவிர்த்து வேறு மாற்றம் ஏதும் நிகழ வாய்ப்பில்லை என தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் இப்போட்டியில் விளையாடுவார். வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் 11 கணிப்பு
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்). ஹர்ஷித் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல் (துணை கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி.
About the Author
R Balaji