தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருக்கின்றனர். மேடைக்கு வந்தடைந்த விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.
`அரசியலுக்கு வந்தது தப்பா?’ – தவெக விஜய்
விஜய் பேசுகையில், “தைரியம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. நம்மை குறைத்து மதிப்பிடும்போதுதான் நம்மை யார் என நிரூபித்துக் காண்பிப்பதற்கான உத்வேகம் பிறக்கும்.
விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா…பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள். என்னுடைய வீடு எங்கே இருக்கிறது தெரியுமா? இந்த தமிழ்நாடு மற்றவர்களுக்குதான் மாநிலம்.

தமிழ்நாடு எனக்கு ஒரு வீடு. என் வீட்டில் 8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
நான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கேன். இந்த விஜய் என்னங்க தப்பு பண்ணான். தன்னை நேசிச்ச மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? நான் போய் மக்களை சந்திக்க உரிய இடம் கூட கொடுக்கமாட்டாங்க. இது என்னங்க நியாயங்க?” என்றார்.
`வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க’
விஜய், “செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு. அதெல்லாம் வேலையே ஆகாது.
வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க, அத வாங்கிகோங்க. அதெல்லாம் உங்க பணம். வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க.

வெறுப்பு அரசியல் பண்ண நான் வரல. மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியலுக்கு வந்திருக்கேன்.
அனுபவம் இல்லாதவர்கள் என்று தவெகவை விமர்சிக்கிறார்கள். உங்க அனுபவம் என்னனு சொல்லட்டுமா… கட்சி தொடங்கிய அண்ணாவை எம்.ஜி.ஆரை மறந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்துதான் உங்க அனுபவம். ஆமா எங்களுக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளை அடிக்க அனுபவம் இல்லை. சுட்டுப்போட்டாலும் அது வராது.” என்றார்,
விஜய், “அடுத்தவங்க ஆரம்பிச்ச கட்சியில அடுத்தவங்களோட அட்ரஸ்ல வாழ்றவங்க தனியா கட்சி ஆரம்பிச்சு 1% வாக்கையாவது வாங்க தகுதி இருக்கா?
கட்சி ஆரம்பித்த அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் இவர்கள் மறந்துவிட்டார்கள். நமக்கு அனுபவம் இல்லையாம். ஆம், நமக்கு கொள்ளையடிப்பதில் அனுபவமில்லைதான்..சரண்டர் ஆவதில் அனுபவம் இல்லைதான்.
நல்லாட்சி கொடுக்க மெத்தப் படித்த மேதாவிகள் தேவைகள் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர் போல என்னால் நல்லாட்சி கொடுக்க முடியும்.

ஆட்சிக்கு வந்த நான்கு வருஷதுக்கு அப்புறம் மக்கள் கனவை கேட்குறாரு முதல்வர்.
நான்கரை ஆண்டுகள் முடிந்த பிறகு வீடு வீடாக கதவை தட்டி ‘உங்களின் கனவு என்ன?’ என கேட்கிறார்கள். மக்களின் கனவு என்னவென உங்களுக்கு தெரியுமா சி.எம் சார்?
2019, 2021,2024 என மக்கள் உங்களை நம்பி வாக்களித்ததற்கு மக்கள் விரோத ஆட்சியை நடத்தினீர்களே. உங்களை தூக்கியெறிந்து விட்டு தவெகவை ஆட்சியில் அமர்த்துவதுதான் மக்களின் கனவு..
மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தால் ஆசிரியர்கள், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் என அத்தனை தரப்பும் எதற்காக போராடுகிறீர்கள்?” என்றார்.
`கோவை மாணவிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை?’
விஜய், “முதல்வர் சொல்வதெல்லாம் அண்ட புழுகு, ஆகாச புழுகு.
பெண்கள் எல்லா இடத்திலும் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். அப்படியெனில்,அண்ணா யுனிவர்சிட்டியில் பெண்ணுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? கோவை மாணவிக்கு ஏன் பாதுகாப்பு இல்லை?
முதலில் தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபியை போடுங்க சார். அப்போதாவது சட்டம் ஒழுங்கு சரியாகிறதா என பார்ப்போம்.

சேலம் மக்களே விஜய்யை நம்புறீங்களா? ஸ்டாலினை நம்புறீங்களா? ஒரு தேர்வை ஒழுங்கா நடத்த தெரியல. உலக நாடோ போட்டிப் போட போறங்களாமா?” என்றார்.
“அவ்ளோ தான். கதம் கதம்”
விஜய் பேசுகையில், “ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயங்களை வாக்குறுதிகளாக தரமாட்டேன். நம்ம வாக்குறுதிகள் தயாராகிட்டு இருக்கு. தெளிவான தேர்தல் அறிக்கை தயராகி வருகிறது. அது ஏமாற்றம் அளிக்காத வகையில் இருக்கும்.
விஜய் ஒரு கட்சியை மட்டுமே எதிர்க்கிறார். விஜய் இன்னொரு கட்சியைப் பற்றி பேசுவதில்லை. என்கிறார்கள். இந்த தேர்தல் யாருக்கான தேர்தல்? சட்டமன்றத் தேர்தல் இது. மக்கள் விரோத திமுக வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். அப்படியிருக்க மக்கள் ஏற்கனவே டெலீட் செய்த கட்சிகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
நீங்க சொல்லுங்க திமுக வேண்டுமா இந்த விஜய் வேண்டுமா? என்று கேட்க தொண்டர்கள் விஜய் என்று சொல்ல, விஜய், “அவ்ளோ தான். கதம் கதம்” என்றார்
`விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன்’
“ஆட்சியில் பங்கு என விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன். அந்த கருத்து இப்போது தமிழக அரசியலில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. சி.எம் சார் பதறி போய் இருக்கார்.
நம்மளோட நம்மை மக்கள் இருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும். நம்பிக்கையா இருங்க. வெற்றி நிச்சயம்.” என்றார்.