India vs Pakistan 2026, Toss Factor: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இரு அணிகளின் போட்டிகள், சம பலம் கொண்ட போட்டிகளாக இருந்ததில்லை.
Add Zee News as a Preferred Source
2007 டி20 உலகக் கோப்பையில் இருந்து பார்த்தால் இதுவரை 9 டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய பாகிஸ்தான் அணிகள் 8 முறை மோதி உள்ளன. இந்திய அணி 7 முறை வெற்றிபெற்றுள்ளன. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றது, 2021இல் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றிபெற்றது.
சம பலத்தில் இருக்கும் இந்தியா – பாகிஸ்தான்
மேலும், எப்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றாலும் பெரும்பாலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பது ஓரளவு தெரிந்துவிடும். ஆனால், நாளைய போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது உறுதியாக சொல்ல முடியாததே, இப்போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் வெற்றிக்கு சம வாய்ப்பு உள்ளது. இரு அணிகளிலும் அதிரடி ஓபனிங் பேட்டர்கள் இருக்கிறார்கள், இரு அணிகளிலும் மிடில் ஆர்டரில் நிலைநின்று ஆடுவதற்கான வீரர்கள் இருக்கிறார்கள், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் உலகத்தர பினிஷர்களும் இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என சம பலத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நீண்ட காலத்திற்கு பின் விளையாட இருக்கிறார்கள்.
பெரிய பிரேமதாசா மைதானம்
2022ஆம் ஆண்டில் மெல்போர்ன் நகரில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியை யாராலும் மறக்கவே முடியாது, அதிலும் குறிப்பாக விராட் கோலியின் இன்னிங்ஸை… அந்த போட்டியில் இந்தியா நூலிழையில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியை போலவே நாளைய போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும் என கூறுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் மெல்போர்ன் மைதானத்தை போலவே இலங்கை பிரேமதாசா மைதானமும் பெரிய பவுண்டரிகளை கொண்டது என்பது நோட் செய்ய வேண்டியதாகும்.
டாஸ் வென்றால் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
நாளைய இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது டாஸ்தான். டாஸில் இந்தியா – பாகிஸ்தான் கேப்டன் கைக்குலுக்குவார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, டாஸ் வெல்லும் அணி பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நாளைக்கு பகல் நேரத் தில் 50-65% மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது முதலே அங்கு ஆடுகளங்கள் மூடிவைக்கப்பட்டுள்ளன. பிரேமதாசா மைதானத்தில் வடிகால் உலகத்தரத்தில் இருப்பதால், மழை பெய்தாலும் ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாவது நாளை நடத்தப்படும். போட்டியின் போது மழைக்கு வாய்ப்பிருப்பதால் டாஸை வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்ய நினைக்கும். குறிப்பாக, இரண்டாவது பேட்டிங் செய்தால் மட்டுமே டிஎல்எஸ் ஸ்கோர் தெரியும், எளிதாக சேஸ் செய்யவும் முடியும்.
பிரேமதாசா மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 143 ஆகும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 128 ஆகும். எனவே, இந்திய அணி ஒருவேளை நாளை டாஸ் வென்று பந்துவீசினால், பாகிஸ்தானை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைக்க வேண்டும். அதேநேரத்தில் முதல் பேட்டிங் செய்தால் 160-170 ரன்களை அடிக்க பார்க்க வேண்டும். மேலும் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சும், ஸ்லோயர் பால் உள்ளிட்ட அதிகம் சாதகமாக இருக்கும்.
மேலும் படிக்க | இந்திய அணி 2 மாற்றங்கள்… பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? – சூர்யகுமார் யாதவ் சொன்ன அப்டேட்
மேலும் படிக்க | பாகிஸ்தான் போட்டியில் தோற்றால் சூப்பர் 8க்கு இந்தியா தகுதி பெறாதா?
மேலும் படிக்க | IND vs PAK: பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கலா…? சூர்யகுமார் கொடுத்த ட்விஸ்ட்
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More