`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' – இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை ‘எஸ்.வி.ராஜதுரை’க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர்.

விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், “எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்சர். உண்மையில் அவர் ஆசான்களுக்கெல்லாம் ஆசான். நான் கல்லூரியில் படித்த காலத்தில் 1995-ல் அவருடைய ‘இருத்தலியலும் மார்க்சியமும்’ என்கிற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை எனக்குள் உருவாக்கத் தொடங்கினேன்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்

தமிழில் எத்தனையோ நாவல்கள், சிறுகதைகள் படித்துக்கொண்டிருந்தாலும், அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான ஒரு பிளாட்ஃபார்மை எனக்கு வழங்கியது அந்தப் புத்தகம்தான். ஒரு தத்துவம் உருவாவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை அந்தப் புத்தகம் எளிமையாகச் சொல்லிக்கொடுத்தது.

சமீபத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்தேன். ‘ வீரம் விளைந்தது ‘ ரஷ்ய நாவலைப் படித்துதான் அவருக்கு கம்யூனிசத்தில் ஆர்வம் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். எனக்கும் மிகவும் பிடித்த நாவல் அது. 80 வயதைக் கடந்தும் இன்றும் உலக நடப்புகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். தத்துவத்தை எளிமையாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய அந்த ஞானிக்கு விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.