"சிறைப் படத்தில் வரும் 2 நீதிபதிகள் போல தான் உண்மையிலும்; இதை மாற்ற..!" – அருணா ஜெகதீசன்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025′-க்கான `இரும்பு மனுஷி’ விருதை வின்சென்ட் கிருஷ்ணம்மாளுக்கு வழங்கினார், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன்.

அப்போது பேசிய அவர், “நான் இதே மேடையில் சில வருடங்களுக்கு முன்பு விருது வாங்கியிருக்கிறேன். அப்போது இருந்த மகிழ்ச்சியைவிட கிருஷ்ணம்மாளுக்கு விருது கொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

`இரும்பு மனுஷி’ கிருஷ்ணம்மாள்
`இரும்பு மனுஷி’ கிருஷ்ணம்மாள்

‘சத்தியவான் சாவித்திரி’ கதையைக் கேட்டிருப்போம். இப்போது சாவித்திரியைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நீதிபதிகள் எல்லாவற்றையும் சட்டரீதியாக மட்டும் பார்க்கக் கூடாது; மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் ‘சிறை’ படத்தில் இரண்டுவிதமான நீதிபதிகளைக் காட்டுவார்கள். அதில் ரத்தினவேல் பாண்டியன் என்ற கேரக்டர் மனிதாபிமானத்துடன் செயல்படுவார்.

பொதுவாக, ஒரு நீதிபதிபோல் இன்னொருவர் இருக்க மாட்டார். அதனால் கால விரயம் ஏற்படும். ஒவ்வொரு நீதிபதியும் மனிதாபிமானத்துடன் இருந்தால், நீதி விரைவில் கிடைக்கும்.’’ என்றார்.

கிருஷ்ணம்மாள் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிபெற்றிருக்கிறார் ஆனால், அதற்கு முன்பு எத்தனை தோல்விகளை அவர் சந்தித்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதே மேடையில் நான் விருது வாங்கியபோது இருந்த மகிழ்ச்சியைவிட, கிருஷ்ணம்மாள் அம்மையாருக்கு வழங்கும்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம், அவர் வீராங்கனை’’ என்றவர், கிருஷ்ணம்மாளை சத்தியவான் சாவித்திரியுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேலும், ` 25 ஆண்டுக்காலம் சட்ட ரீதியாகப் போராடி, அவர் வெற்றிபெற்றிருக்கும் இந்தத் தருணம் நெகிழ்வான ஒன்று.

ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் மன உறுதியுடன் இதில் செயல்பட்டிருக்கிறார். இல்லையென்றால், யாராக இருந்தாலும் இந்தப் போராட்டத்தை விட்டுவிடுவார்கள். நான் இப்போது உங்களுக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். `சிறை’ படத்தில் இரண்டுவிதமான நீதிபதிகளைக் காண்பிப்பார்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு அதுதான் பதில். ஒரு நீதிபதி `ரத்தினவேல் பாண்டியன்’ என்ற பெயரைக்கொண்டவர். அவர் மனிதநேயத்துடன் நடந்துகொள்வார். தனக்கிருக்கும் சட்ட விதிமுறைகளை மீறி அந்தக் காவலர் வந்தபோது, அவர் அந்தச் சட்ட விதிகளை மீறியதாக எடுத்துக்கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார். அவருக்கு அடுத்து வரும் நீதிபதி எப்படி நடந்துகொள்வார் என்பது அந்தப் படத்தில் காண்பிக்கப்படுகிறது. இது சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். ஆனால், அந்த மன உறுதியைத்தான் நாம் இப்போது பார்க்க வேண்டும். அதேபோல் கிருஷ்ணம்மாள் அம்மையாருக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.