'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' – சகாயம் IAS

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. இவருக்கு இந்த ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் ‘உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருதை வழங்கி சிறப்பித்தது ஆனந்த விகடன்.

இந்த விருதை அவரது குடும்பத்திற்கு வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., “கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார்.

குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது.

சகாயம் ஐ.ஏ.எஸ்
சகாயம் ஐ.ஏ.எஸ்

ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் ‘மாமனிதர்’ என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது.

இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும்.

எனக்கும், என் குடும்பத்திற்கும் ‘துண்டு துண்டாக வெட்டி விடுவோம்’ என்று மூன்று முறை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதுவரை அனுப்பியவர்கள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதே காவல்துறைதான் இன்று ஜகபர் அலியின் கொலைக்கும் காரணம் என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை” என்றார்.

நம்பிக்கை விருதுகள் 2025
நம்பிக்கை விருதுகள் 2025

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.