'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் – 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, “எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்குவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

`தோழர்’ என்று நான் திருமாவளவனை அழைத்தாலும், அவர் எப்போதுமே எனக்குத் தலைவராகத்தான் தெரிகிறார். தமிழ்நாட்டைச் சூழும் இருளை அகற்றத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் அவர்.

பெருந்தமிழர் விருது
பெருந்தமிழர் விருது

அதேபோல சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் தமிழ்க் கலாசாரம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். எனக்கு இந்த விருதைக் கொடுத்து கௌரவித்த விகடனுக்கு நன்றி. என் உடல் ஒத்துழைக்காதபோதும், என் கண்களுக்குப் பார்வை மங்கியபோதும் என்னை வழிநடத்தியது வாசிப்பு மட்டும்தான்.

`மார்க்ஸ், கிராம்ஷி போன்றவர்கள் அனுபவிக்காத துன்பத்தையா நான் அனுபவித்துவிட்டேன்?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். அந்த வைராக்கியம்தான் என்னை இப்போதும் எழுத வைக்கிறது. சாகும்வரை இந்த அறிவுப் போராட்டம் தொடரும்!’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.