India vs Pakistan Live Telecast And Streaming: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் உச்சக்கட்ட மோதல் நாளை (பிப். 15) நடக்க இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் மோத இருக்கின்றன.
Add Zee News as a Preferred Source
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை தலா இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
பாய காத்திருக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி அதன் அனைத்து போட்டிகளையும் இலங்கையில்தான் விளையாட இருக்கின்றன. அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றாலும் பாகிஸ்தான் அணி கொழும்புவில்தான் விளையாடும். இது அவர்களுக்கு ஹோம் கிரவுண்ட் போன்ற சாதகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கையில் அந்த அணியின் வீரர்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதால் பாகிஸ்தான் அணி தற்சமயம் பலமாக திகழ்கிறது.
பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியுடனான அதன் முதல் போட்டியில் பேட்டிங்கில் கடும் சறுக்கலை சந்தித்தது. ஆனால், பஹீம் அஷ்ரப்பின் கடைசிநேர அதிரடியால் பெரும் தோல்வியில் இருந்து மீண்டது. அமெரிக்க அணியிடம் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கு கூட வராத பாகிஸ்தான் இந்த முறை அந்த அணியை துரத்தியடித்து மிரட்டி உள்ளது. தற்போது இந்திய போட்டியையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இந்திய அணி இதுவரை…
இந்திய அணியை பொருத்தவரையில், அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டை எடுத்து திணறியது. ஆனால் சூர்யகுமார் யாதவ் 84* ரன்களை அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டரில் சிறு சறுக்கலை இந்தியா சந்தித்தது. இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து அந்த போட்டியில் வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது. பாகிஸ்தான் போட்டிக்காக சுழற்பந்துவீச்சை இன்னும் பலப்படுத்த ஒரு சில வீரர்களை அணிக்குள் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரலையை எப்போது, எப்படி பார்ப்பது?
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நாளை (பிப். 15) நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும், டாஸ் மாலை 6.30 மணிக்கு வீசப்படும். இப்போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட் சேனல்களில் கண்டுகளிக்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் போட்டியின் நேரலையை பார்க்கலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல வர்ணனைகளில் நீங்கள் போட்டியை காணலாம்.
இந்திய அணி ஸ்குவாட்
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
பாகிஸ்தான் அணி ஸ்குவாட்
சல்மான் அலி ஆகா (கேப்டன்), சைம் அயூப், பாபர் அசாம், கவாஜா நஃபே, ஃபகர் ஜமான், முகமது சல்மான் மிர்சா, சாஹிப்சாதா ஃபர்ஹான், ஷதாப் கான், முகமது நவாஸ், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான், அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்
மேலும் படிக்க | IND vs PAK: வெற்றியை தீர்மானிக்கப்போகும் அந்த 3 வீரர்கள் யார் தெரியுமா?
மேலும் படிக்க | IND vs PAK: இந்திய அணிக்கு 3 முக்கிய பிரச்னை இருக்கு… பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் சாதகம்!
மேலும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடப்பதில் புதிய சிக்கல்! வெளியான முக்கிய அறிவிப்பு!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More