அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நாளை மாலை 7 மணிக்கு இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தாலும், மழை குறுக்கிடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முதலில் பாகிஸ்தான அணி இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் Uturn அடித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் விளையாட சம்மதம் தெரிவித்தது. தற்போது இரு அணிகளும் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்கப்படும் மூன்று வீரர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source

ஜஸ்பிரித் பும்ரா
உலகளவில் சிறந்த பவுலராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் பேஸ்மேன்களுக்கு எப்போதுமே தலைவலியாக தான் இருந்து வருகிறார். இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் பும்ரா சிறப்பாக பந்து வீசி உள்ளார். அவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆவது வழக்கமாக இருந்து வருகிறது. டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்லோ பால்களின் மூலம் விக்கெட்களை எடுத்து வருகிறார். பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை ஆரம்பத்தில் எடுத்து ஜஸ்பிரித் பும்ராவால் வெற்றியை தீர்மானிக்க முடியும்.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
பாகிஸ்தான் போட்டி என்றாலே ஹர்திக் பாண்டியா குஷி ஆகி விடுவார். பல போட்டிகளை தனி ஒருவராக வென்று கொடுத்துள்ள ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கை கொடுக்க முடியும். ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி உள்ளார். மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பது மற்றும் தேவையான நேரத்தில் விக்கெட்களை எடுப்பது என்று இந்திய அணிக்கு பெரிதும் உதவி உள்ளார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது.

அபிஷேக் சர்மா மட்டும் வருண் சக்கரவர்த்தி
இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிர் அணியின் பந்துவீச்சாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறார். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிவிளையாடிய ஆசிய கோப்பை போட்டியில் அபிஷேக் சர்மா பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறடித்தார். குறிப்பாக பவர் பிளேயில் அப்ரீடியை சிறப்பாக எதிர்த்து ஆடி இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். வயிற்று வலி காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத அபிஷேக் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சூழலில் கலக்கி வரும் வருண் சக்கரவர்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் பந்துவீச்சை இன்னும் யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டாலே பாகிஸ்தானை எளிதாக இந்திய அணி வீழ்த்த முடியும்.
About the Author
RK Spark