இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலக கிரிக்கெட்டையே ஆட்டி படைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு வாரியமாக இருந்து வருகிறது. காரணம் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட பிசிசிஐ இடம் அதிகமான பணம் உள்ளது. இதற்கு இந்திய சந்தை மதிப்பே மிக முக்கிய காரணமாகும். ஒட்டுமொத்த உலகை காட்டிலும் இந்தியாவில் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருவாய் பங்கீட்டில் பிசிசிஐக்கு அதிக பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டு கால சுழற்சிக்காண வருவாய் பங்கீடு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் பிசிசிஐக்கு கிடைக்கும் தொகை மற்ற எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் கனவில் கூட நியமித்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இந்தியாவிற்கு 38.50 சதவீதம் 

உலக அளவில் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் 70% பேர் இந்தியாவில் இருந்து தான் பார்க்கின்றனர். இதன் காரணமாக தான் பிசிசிஐக்கு ஐசிசி 38.50 சதவீதம் ஒதுக்கியுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 2079 கோடி ரூபாய் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த வருமானத்தை சேர்த்தால் கூட பிசிசிஐயின் வருமானத்திற்கு ஈடாகாது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி 5.75% வருவாய் மட்டுமே ஒதுக்கிறது. இதன் மதிப்பு சுமார் 310 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் வருவாய்யை ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கு கிடைக்கும் வருவாய் மிக மிக குறைவானதாகும். ஆனாலும் அவர்களுக்கு இது ஒரு பெரிய தொகை தான். இதை வைத்து தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இயங்குகிறது. 

இந்தியா – பாகிஸ்தான் போட்டி 

மற்ற போட்டிகளை விட இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் ஐசிசிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் ஒரு போட்டியின் மூலம் மட்டுமே சுமார் 1,800 கோடி முதல் 2,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வருவாயை வைத்து தான் ஐசிசி உலக அளவில் மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. இதன் காரணமாகத் தான் ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் இடம் பெறுகின்றன.

இந்தியாவின் ஆதிக்கம்

வருவாயில் மட்டுமல்லாமல், கிரிக்கெட் களத்திலும் இந்தியா, பாகிஸ்தானை விட வெகுவாக முன்னேறியுள்ளது. டி20 போட்டிகளில் இதுவரை இந்த இரு அணிகளும் 16 முறை மோதியுள்ளன. அதில் 13 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2024 டி20 உலக கோப்பையில், குறைந்த ஸ்கோரை (119 ரன்கள்) வைத்துக்கொண்டு, ஜஸ்பிரித் பும்ராவின் அபார பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கடைசியாக இந்தியாவை டி20 போட்டியில் வீழ்த்தி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இந்தியா 3 முறை பாகிஸ்தானை வீழ்த்தியது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.