சரவெடியான இஷான்… புஸ்வானமான அபிஷேக் – பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் டார்கெட்

India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (பிப். 15) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

Add Zee News as a Preferred Source

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார், பாகிஸ்தான் அணி அதன் பிளேயிங் லெவனில் மாற்றமே செய்யவில்லை. இந்திய அணி சஞ்சு சாம்சனுக்கு பதில் அபிஷேக் சர்மாவையும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் ஓவர் சிறப்பாக போகவில்லை. சமீப காலமாக பெரிதாக பந்துவீசாத கேப்டன் சல்மான் அலி ஆகா, பாகிஸ்தான் அணிக்காக முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் இஷான் கிஷன் அடித்த சிங்கிளை தவிர 5வது பந்து வரை ரன்னே வரவில்லை. எனவே, கடைசி பந்தில் தூக்கி அடிக்க திட்டமிட்ட அபிஷேக் சர்மா, ஷார்ட் லாங்-ஆன் திசையில் ஷாகின் அப்ரிடியிடம் கேட்சை கொடுத்தார். இந்த தொடரில் 2வது முறையாக அபிஷேக் சர்மா டக்-அவுட்டானார்.

ஆனால் அடுத்தடுத்து இந்திய அணி அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தது. குறிப்பாக இஷான் கிஷன் சரவெடியாக வெடித்தார். இதனால், பவர்பிளேவில் 52 ரன்களை அடித்து 1 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். 26 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், 40 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் என 77 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இதனால், 10 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு இந்தியா 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. 

அதன்பின் உஸ்மான் தாரிக் பந்துவீச வந்த பின்னர் இந்தியாவின் ரன்வேகம் குறைந்தது. திலக் வர்மா 25(24), ஹர்திக் பாண்டியா 0(1) ஆகியோர் சயீம் அயூப் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடன் சிவம் தூபே நிதானமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடி 26 பந்துகளில் 33 ரன்களை அமைத்தது. சூர்யகுமார் யாதவ் 32(29) ரன்களுக்கு உஸ்மான் தாரிக் பந்துவீச்சில் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷாகின் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி, 1 சிக்ஸர் அடிக்கப்பட்டது. தூபே 27(17), அக்சர் பட்டேல் 0(1) என ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 175 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சயீம் அயூப் 3 விக்கெட், உஸ்மான் தாரிக், ஷாகின் அப்ரிடி, சல்மான் அலி ஆகா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரே இதுதான் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 18 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை பயன்படுத்தியது. அப்ரிடி 2வது மற்றும் 20வது ஓவரை மட்டுமே வீசியிருந்தார். உஸ்மான் தாரிக் 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை மட்டும் எடுத்து 24 ரன்களை கொடுத்தார், அவரை கவனத்துடன் இந்திய அணி விளையாடியது. ஷதாப் கானின் ஒரே ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது, அதன்பின் அவர் பந்துவீசவில்லை. அப்ரார் அகமது 3 ஓவருக்கு 38 ரன்களை கொடுத்து, விக்கெட்டே எடுக்கவில்லை. இந்திய அணி பந்துவீசி வரும் நிலையில் 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 38 ரன்களை எடுத்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. 

மேலும் படிக்க | வைபவ் சூர்யவம்சியின் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? நாளை தேர்வு எழுதுகிறார்!

மேலும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.