IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் இலவச நேரலை ஸ்கோர்கார்ட் + தமிழ் கமெண்டரி – எப்படி பார்ப்பது?

India vs Pakistan, Live Scorecard With Tamil Commentary: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கிரிக்கெட் உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. அரசியல் பதற்றம் முதல் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே இப்போட்டி நடைபெற உள்ளது.

Add Zee News as a Preferred Source

சம பலத்துடன் மோதும் இந்தியா – பாகிஸ்தான் 

இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன, தலா 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ன. நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 2வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி தோற்றாலும் சூப்பர் 8 செல்வதற்கு பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை. இருப்பினும், இரு அணிகளும் சம பலம் கொண்டு மோதுவதால் எதிர்பார்ப்புகள் வலுவடைந்துள்ளன.

இரு அணிகளின் முக்கிய வீரர்கள்

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் வெற்றியை தீர்மானிக்கும் வீரர்களாக இருப்பார்கள். இலங்கை பிரேமதாசா மைதானம் சற்று பெரியது என்பதால் சிக்ஸர்கள் பறக்கவிடுவது சிரமம் ஆகலாம், எனவே பவர்பிளேவில் அபிஷேக் சர்மாவின் அதிரடி முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல், வருண் மற்றும் குல்தீப் பந்துவீச்சுக்கு எதிராக பெரிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு பேட்டிங் செய்யவும் சிரமமாக இருக்கும். அதேபோல் பாகிஸ்தான் அணியை பொருத்தவரை சைம் அயூப், அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் ஆகியோரும் முக்கிய வீரர்களாக திகழ்வார்கள்.

குஷியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 

அதேநேரத்தில், நேற்றில் இருந்து மழையின் காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளம் அதிகளவில் வெயில்படாமல் இருந்தால் நிச்சயம் ஈரத்தன்மையுடன் இருக்கும். ஈரத்தன்மையுடன் ஆடுகளம் இருந்தால் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பவர்பிளேவிலேயே தாக்குதல் தொடுப்பார்கள். இன்று அர்ஷ்தீப் விளையாடுவது சந்தேகம் எனலாம். சிவம் தூபே மிடில் ஓவர்களில் கைக்கொடுப்பார். பாகிஸ்தான் அணியை பொருத்தவரை கடந்த அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சாளராக ஷாகின் ஷா அப்ரிடி மட்டுமே பந்துவீசினார். சல்மான் மிர்சா இந்த போட்டியில் விளையாடுவதற்கும் வாய்ப்பு குறைவு. பஹீம் அஷ்ரப் வேகப்பந்துவீச்சு ஆப்ஷனாக அணியில் இருக்கிறார்.

பிளேயிங் லெவன் கணிப்பு

இந்திய அணி: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான் அணி: சைம் அயூப், சஹிப்சாதா பர்ஹான், சல்மான் அலி ஆகா (கேப்டன்), பாபர் அசாம், முகமது நவாஸ், ஷதாப் கான், பஹீம் அஷ்ரப், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷகீன் அப்ரிடி, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்.

#TeamIndia’s training session in Colombo#MenInBlue | #T20WorldCup pic.twitter.com/ia1ehyvMFS

— BCCI (@BCCI) February 14, 2026

போட்டி எப்போது தொடங்கும்?

குரூப் ஏ-வில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 6.30 மணிக்கு வீசப்படும். டாஸின் போது கேப்டன்களும், போட்டி நிறைவடைந்த பின்னர் வீரர்களும் பரஸ்பரம் கைக்குலுக்குவார்களா என்ற கேள்வியும் தற்போது நிலவுகிறது. 

ஆட்டம் தாமதமாக வாய்ப்பு

மழையின் தாக்கம் இரவு 7 மணிவரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ் தாமதமாகலாம். பிரேமதாசா மைதானத்தில் வடிகால் உலகத்தரத்தில் இருப்பதால், குறைந்தபட்சம் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரலையில் காணலாம்.

தமிழ் கமெண்டரி + லைவ் ஸ்கோர்கார்ட்

சந்தா செலுத்தினால் மட்டுமே இவற்றை நேரலையில் நீங்கள் கண்டுகளிக்க முடியும். ஒருவேளை சந்தா செலுத்த வாய்ப்பில்லாதவர்கள், போட்டியை நேரலையில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் ஆகியோருக்கு வசதியாக தமிழ் கமெண்டரியுடன் கூடிய லைவ் ஸ்கோர்கார்டை நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் இன்று ஒளிபரப்ப இருக்கிறது. இதனால், ஒவ்வொரு பந்தையும் நமது கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள் தமிழில் எளிமையாக விளக்குவார்கள், அதேநேரத்தில் திரையிலும் போட்டியின் அனைத்து விவரங்களும் ஸ்கோர்கார்ட் முறையில் ஒளிபரப்பாகும்.

ஸ்கோர்கார்ட் நேரலையை பார்ப்பது எப்படி?

இதனால், போட்டியை காண வாய்ப்பில்லாதவர்கள் எங்களின் தமிழ் கமெண்டரியுடன் கூடிய ஸ்கோர்கார்டை பார்த்தாலே போட்டியை காண்பது போன்ற அனுபவத்தை பெறலாம். தமிழ் கமெண்டரியுடன் கூடிய லைவ் ஸ்கோர்கார்டை நமது ஜீ தமிழ் நியூஸின் யூ-ட்யூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பார்க்கலாம். இதன் நேரலை மாலை 6.30 மணியளவில் தொடங்கும். யூ-ட்யூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேரலை லிங்க் இங்கு நேரலை தொடங்கியதும் இணைக்கப்படும்.

மேலும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

மேலும் படிக்க | இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யலாம்…? பாகிஸ்தானை வீழ்த்த பெஸ்ட் வியூகம்!

மேலும் படிக்க | பாகிஸ்தான் போட்டியில் தோற்றால் சூப்பர் 8க்கு இந்தியா தகுதி பெறாதா?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.