ஈரோடு: தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மணல் திருட்டுக்கு உதவிய அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “ஊழலுக்கு பெயர் போன இயக்கம் திமுக மட்டுமே” என்றும் சாடியுள்ளார். ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், “கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய அரசு அதிமுக. ஆனால் […]