குல்தீப் யாதவிடம் சண்டைக்கு சென்ற ஹர்திக் – சூர்யா! என்ன நடந்தது? முழு விவரம்!

2026 டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில், மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கடைசி நேரத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Add Zee News as a Preferred Source

 

Hardik Pandya and Kuldeep Yadav arguments at Colombo match.

A dropped catch is part of cricket – it happens to the best players as well.

Kuldeep Yadav missing Shaheen Afridi’s catch was unfortunate, but these moments are normal in a high-pressure game. No player drops a… pic.twitter.com/6MQpRfe52D

— Anant (@ImAnant_45) February 16, 2026

கொழும்புவில் என்ன நடந்தது?

நேற்று கொழும்புவில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 114 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி 10 ஓவர்களிலேயே பாதி விக்கெட்டை இழந்து, தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்நிலையில் போட்டியின் 18வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடி அடித்த பந்து பவுண்டரி லைனிற்கு கேட்சிற்கு சென்றது.

பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த குல்தீப் யாதவ், அந்த கேட்சை பிடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவர் கைகளில் பட்டு, சிக்ஸருக்கு சென்றது. கேட்சை பிடிக்கவில்லை என்றாலும், பந்தை சிக்ஸ் செல்லவிடாமல் தடுத்து இருக்கலாம். ஆனால் குல்தீப் அதனை செய்யவில்லை. அது மிக எளிமையான கேட்ச் என்பதால், ஹர்திக் பாண்டியா கடும் அதிருப்தி அடைந்தார். போட்டி ஏற்கனவே இந்தியாவின் கையில் இருந்தபோதும், ஹர்திக் பாண்டியாவால் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் குல்தீப் யாதவை நோக்கி சில வார்த்தைகளை கூறி திட்டினார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரியாக்ஷன்

ஹர்திக் பாண்டியாவின் கோபம் ஒருபுறம் இருக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவும் இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்தார். போட்டி முடிந்த பிறகு, இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கும் நேரத்தில், சூர்யகுமார் யாதவ் குல்தீப் யாதவிடம் முகத்தை திருப்பிக்கொண்டு கோபமாக பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. குல்தீப் யாதவ் ஏதோ விளக்கம் சொல்ல முயன்றாலும், சூர்யகுமார் அதை ஏற்காமல் அவரை தள்ளிவிட்டு செல்கிறார். எப்போதும் கூலாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், இப்படி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

குல்தீப்பின் நிலை

மைதானத்திலேயே சீனியர் வீரர்கள் இருவர் திட்டியதால், குல்தீப் யாதவ் மிகவும் சோகமாக காணப்பட்டார். ஹர்திக் பாண்டியா கடைசி விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானை ஆல்-அவுட் செய்த பிறகு, கொண்டாட்டத்திற்காக வீரர்கள் கூடிய போதும், ஹர்திக் மீண்டும் குல்தீப்பை நோக்கி விரல் நீட்டி பேசும் வீடியோவும் வெளியாகி உள்ளது. ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் நிலைமையைச் சமாளிக்க முயன்றனர். இதற்கு முன்பும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் களத்தில் இருக்கும் போதும் குல்தீப் யாதவ் இதே போல திட்டு வாங்கி உள்ளார். தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவிடவும் திட்டு வாங்கி வருகிறார்.

 

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.