IND vs NED: இந்தியா பிளேயிங் 11.. இரண்டு முக்கிய வீரர்கள் நீக்கம்! சூப்பர் 8க்கு முன்பாக பெரிய மாற்றம்

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இத்தொடரில் இந்திய அணியை பொறுத்தவரையில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Add Zee News as a Preferred Source

இதையடுத்து இந்திய அணி நமீபியா அணியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த சூழலில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாதியில் பாகிஸ்தான் அணி கடுமையாக சொதப்பியால், போட்டியின் ஆர்வம் குறைந்தது. 

பாகிஸ்தானுடன் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 77 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கடுமையாக சொதப்பியது. அந்த அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. 

இந்த நிலையில், லீக் சுற்றில் இந்திய அணி தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 18) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

அபிஷேக் சர்மா விலகல்

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விலக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் விளையாட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் சர்மா வயிற்று வலியுடன் இருந்த நிலையில், அவர் நமீபியா போட்டியில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடினார். இருப்பினும் அவர் முழுமையாக குணமடைந்ததாக தெரியவில்லை. அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். 

இதனால் அவருக்கு இன்னும் சிறுதி ஓய்வளித்து நிர்வாகம் அவரை சூப்பர் 8 சுற்றுக்கு அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நெதர்லாந்து போட்டியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என தெரிகிறது. 

ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு 

அதேபோல், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஓய்வளிக்கலாம் என தெரிகிறது. அவர் நமீபியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் விளையாடியதால், பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. எனவே நெதர்லாந்து போட்டியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடுவார் என தெரிகிறது. மேலும், அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவுக்கு பதிலாக விளையாடுவார் என்றும் தெரிகிறது. 

நெதர்லாந்து போட்டிக்கு எதிராக இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் (துணை கேப்டன்), வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.