இஷான் கிஷன் காதலி இவர் தானா…? அவரின் தாத்தாவே சொன்ன தகவல்

Ishan Kishan Girlfriend: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

Add Zee News as a Preferred Source

20 அணிகளில் 10 அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. 7 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இன்னும் ஓரிடம் மட்டுமே இருக்கும் நிலையில், பாகிஸ்தான்/ அமெரிக்கா/ நெதர்லாந்து உள்ளிட்ட 3 அணிகள் அதற்கு முட்டிமோதுகின்றன. நாளை (பிப். 17) மதியம் நடைபெறும் பாகிஸ்தான் – நமீபியா போட்டியில் எந்த அணிக்கு அந்த இடம் என்பது உறுதியாகிவிடும்.

சூப்பர் 8இல் இந்திய அணி 

இந்திய அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து சூப்பர் 8சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகளை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. முன்னதாக குரூப் சுற்றில் அமெரிக்கா மற்றும் நமீபியாவை வீழ்த்தியிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்று இடத்தை இந்திய அணி உறுதிசெய்திருந்தது.

ஆட்ட நாயகன் இஷான் கிஷன்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு முக்கியமான இன்னிங்ஸை விக்கெட் கீப்பரும், ஓபனருமான இஷான் கிஷன் விளையாடியிருந்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை விளாசிய தள்ளிய அவர், 40 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் என 77 ரன்களை குவித்திருந்தார். ஆட்டநாயகன் விருதையும் அவரே வென்றார். அன்றைய தினம் இரு அணிகளிலும் சிறப்பாக விளையாடியவர் இஷான் கிஷன் மட்டுமே, அழுத்தம் நிறைந்த போட்டியில் கடினமான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடியதால் அதிகம் பாராட்டப்பட்டது. 

அதிதி ஹூந்தியா உடன் டேட்டிங்

இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி, உள்நாட்டு தொடர்களில் தன்னை நிரூபித்து, தற்போது இந்திய அணி மிரட்டிக் கொண்டிருக்கும் இஷான் கிஷனின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த மட்டுமின்றி சொந்த வாழ்க்கை குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இஷான் கிஷன், மாடல் அதிதி ஹூந்தியாவை டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை இஷான் கிஷனின் தாத்தா உறுதிசெய்துள்ளார்.

இஷான் கிஷன் தாத்தா சொன்னது என்ன?

இதுகுறித்து ANI ஊடகத்தில் பேசிய இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே, “இஷான் கிஷன் யாரை திருமணம் செய்ய விரும்பினோலும் நாங்கள் அதை ஏற்க தயாராகவே இருக்கிறோம். அதிதி அவரது காதலி. அவர் ஒரு மாடல். குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை ஏற்க வேண்டும்” என பேசியிருந்தார். குறிப்பாக, இஷான் யாரை திருமணம் செய்ய நினைத்தாலும், அவருடைய முடிவை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்போம் என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், இஷான் கிஷன், அதிதியை காதலிப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் படிக்க |  வெளியேறிய ஆஸ்திரேலியா… ஜிம்பாப்வேக்கு ஜாக்பாட் – இந்திய அணியின் சூப்பர் 8 போட்டிகள் இதோ!

மேலும் படிக்க | இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் விளையாட கூடாது.. இதுதான் காரணம்! முழு விவரம்

மேலும் படிக்க | குல்தீப் யாதவிடம் சண்டைக்கு சென்ற ஹர்திக் – சூர்யா! என்ன நடந்தது? முழு விவரம்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.