'சூப்பர் ஸ்டாரை' தூக்கியெறியும் பாகிஸ்தான் அணி… பிளேயிங் 11ல் முக்கிய மாற்றம்!

ICC T20 World Cup 2026, Pakistan vs Namibia: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. குரூப் சுற்று போட்டிகள் இன்னும் சில நாள்களில் நிறைவடைய இருக்கின்றன, சூப்பர் 8 சுற்றுக்கு அணிகள் தயாராகி வருகின்றன. 

Add Zee News as a Preferred Source

இதுவரை குரூப் ஏ-ல் இந்தியா, குரூப் பி-ல் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே, குரூப் சி-ல் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து, குரூப் டி-ல் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இன்னும் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

நெதர்லாந்துக்கு வாய்ப்பில்லை?

இந்திய அணிக்கு எதிரான நாளைய போட்டியில் நெதர்லாந்து அணி 140 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது இலக்கை 3 ஓவர்களிலோ அடித்தால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும். நமீபியா அணி பாகிஸ்தானை வீழ்த்தினால்தான் நெதர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு உருவாகும், ஆனால் அது மிக மிக அரிது எனலாம். அமெரிக்க அணி தற்போது அனைத்து போட்டிகளையும் விளையாடிவிட்டது, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியும் 4 புள்ளிகளுடன் குறைந்த நெட் ரன்ரேட்டில் 3வது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு முக்கிய போட்டி 

இதனாலேயே கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் – நமீபியா அணிகள் நாளை (பிப். 18) மதியம் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வென்றாலே அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு சென்றுவிடும். அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடர், பாகிஸ்தான் அணி குரூப் சுற்றில் அமெரிக்க அணியிடம் தோற்று, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. எனவே, தொடர்ந்து 2வது முறையாக டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்றோடு வெளியேறாமல் இருக்க நாளைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டயாத்தில் பாகிஸ்தான் உள்ளது.

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான்…

பாகிஸ்தான் அணி இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது, ஆனால் ஒரே ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு 2022 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு வந்த பாகிஸ்தான், இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. 2010, 2012 டி20 உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியுடன் வெளியேறிய பாகிஸ்தான், 2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பை தொடர்களில் சூப்பர் 10 சுற்றோடு வெளியேறியது. 2021 தொடரிலும் அரையிறுதியுடன் வெளியேறியது, பாகிஸ்தான்.

பாகிஸ்தான் தோற்றால் பெரும் பின்னடைவு

தற்போது டி20 தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியிடம் கடைசி நேரத்தில் சுதாரித்து வெற்றிபெற்றது. கடந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்றாலும், இந்த முறை சிறப்பாக விளையாடி அந்த அணியை வென்றது. இந்தியாவிடம் மட்டுமே தோற்றிருக்கிறது. நாளைய போட்டியில் ஒருவேளை தோற்றால் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும். ஆசிய கண்டத்தில் அதுவும் பாகிஸ்தானுக்கு சாதகமான இலங்கையில் தோல்வியை சந்தித்து வெளியேறினால் நிச்சயம் பாகிஸ்தான் அணியுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும்.

கூடுதல் வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு

இந்தச் சூழலில், பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு போட்டிகளும் இரவு போட்டிகளாகும், இந்த போட்டிகளில் முறையே 16 ஓவர்கள் மற்றும் 18 ஓவர்களை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களே வீசினர்.  ஆனால் நமீபியா அணிக்கு எதிரான போட்டி மதியம் நேர போட்டி என்பதால் வேகப்பந்துவீச்சாளர்களும் போட்டியில் தாக்கம் செலுத்துவார்கள். எனவே, ஷாஹீன் ஷா அப்ரிடி உடன் சல்மான் மிர்சாவும் பிளேயிங் லெவனில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உஸ்மான் தாரிக் அல்லது அப்ரார் அகமது ஆகியோரில் ஒருவருக்கு பதில் சல்மான் மிர்சா களமிறங்குவார். இல்லையெனில் ஷாகின் அப்ரிடிக்கு பதில் சல்மான் மிர்சா அல்லது நசீம் ஷா விளையாட வைக்கப்படலாம்.

பாபர் அசாம் நீக்கம்

அதேபோல், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்களை அடித்தவரும், பாகிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் பேட்டராகவும் அறியப்படும் பாபர் அசாமுக்கு பதில் பக்கார் ஜமானை அணியில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை விளையாடி வருகிறார், பார்ம் இல்லை என்றாலும் கூட அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக மிக மோசமானதாக இருக்கிறது. இதன் காரணமாக, மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை. எனவே, இடது கை பேட்டரான பக்கார் ஜமானை நாளைய முக்கிய போட்டியில் களமிறக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்ப.. இதை செய்தால் போதும்! முழு விவரம்

மேலும் படிக்க | இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் விளையாட கூடாது.. இதுதான் காராண்ம்! முழு விவரம்

மேலும் படிக்க | குல்தீப் யாதவிடம் சண்டைக்கு சென்ற ஹர்திக் – சூர்யா! என்ன நடந்தது? முழு விவரம்!

   

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.