தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!|Live

பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, புதிய கட்சி தவெக என இந்தச் சட்டமன்ற தேர்தல், அதிக கவனம் பெறுகிறது.

ஆட்சியைத் தொடர வேண்டும் என்று திமுகவும், ‘விட்டதைப் பிடிக்க வேண்டும்’ என்று அதிமுக கூட்டணியும், புதிதாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று தவெகவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13), மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை ப்ளஸ் கோடைக்கால ஊக்கத்தொகை என்று ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை வழங்கியிருக்கிறது திமுக.

பட்ஜெட்டிற்கு முன்பே, மகளிர் வாக்குகளை அள்ளுவதற்கு திமுக இப்படியான ஒரு செயலை செய்து பெண்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனால், இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றற் போல, பெரும் அறிவிப்புகளை இன்று வாரி வழங்கும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

‘இன்று’ தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்!

இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

இன்று காலை 9.30 மணியளவில் பட்ஜெட் உரை தொடங்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.