Nayanthara:“மூன்று மாநில விருதுகள், உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக.!" – நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் விருது விழாவில் பங்கேற்றனர். 2017-ம் ஆண்டு வெளியான ‘அறம்’ படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘கூழாங்கல்’ படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஆனால், நடிகை நயன்தாரா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், மொத்தம் 3 விருதுகள் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு தனது நன்றியையும் அந்த படங்களுக்காக உழைத்த தனது படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை நயன்தாராவின் சமூக வலைதளப் பக்கத்தில், “அறம்’ படத்திற்காக எனக்கு மாநில விருது வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மேலும், எங்களது தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ (@therowdypictures) சார்பாக ‘நெற்றிக்கண்’ (NETRIKANN) மற்றும் ‘கூழாங்கல்’ (KOOZHANGAL) ஆகிய படங்களுக்கும் மாநில விருதுகள் கிடைத்ததற்கும் நன்றிகள்.

மூன்று மாநில விருதுகள்… உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.