டி20 உலகக்கோப்பை: 19 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! இந்த லிஸ்டில் இந்தியா டாப்

T20 World Cup: நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்திருக்கும் நிலையில், 19 ஆண்டுகால சாதனை ஒன்று இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை இத்தாலி – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்திருக்கிறது. அது என்னவென்றால், அதிகமுறை 200 ரன்கள் அடிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடராக இது அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியில் 5 முறை 200 ரன்கள் அடிக்கப்பட்டன. இந்த முறை லீக் சுற்று போட்டிகள் முடிவதற்குள் 6 முறை 200 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில், புதிய சாதனையாகும். டி20 உலகக்கோப்பையில் அதிக முறை 200 ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

டி20 உலகக்கோப்பையில் அதிக முறை 200 ரன்கள் எடுத்த அணிகள்

1. தென்னாப்பிரிக்கா: உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடத்தில் உள்ளது.
2. இந்தியா: இந்திய அணி இதுவரை 5 முறை 200 ரன்களைக் கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.
4. இங்கிலாந்து: இங்கிலாந்து அணி 3 முறை இச்சாதனையைச் செய்துள்ளது.
5. மேற்கிந்தியத் தீவுகள்: டி20 ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் உள்ள அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 முறை 200 ரன்களைக் கடந்துள்ளது.

இப்போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களை கடந்த அணிகளின் பட்டியலை பார்க்கலாம்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200+ ரன்கள் எடுத்த அணிகள்:

இந்தியா: சர்வதேச டி20 பார்மேட்டில் இந்திய அணி 47 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து முதலிடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா: இந்தப் பட்டியலில் 29 முறை 200 ரன்களுக்கும் மேல் அடித்து தென்னாப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து: நியூசிலாந்து அணி இதுவரை 28 முறை 200 ரன்களைக் கடந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணி சர்வதேசப் போட்டிகளில் 25 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள்: அதிரடிக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் அணியும் 25 முறை 200 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளது.

இங்கிலாந்து: இங்கிலாந்து அணி இதுவரை 24 முறை 200 ரன்களைக் கடந்து இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது.

டி20 உலகக்கோப்பையில் பதிவான சில முக்கிய 200 மேலான ஸ்கோர்கள்:

இலங்கை 260/6: 2007-ஆம் ஆண்டு கென்யாவிற்கு எதிராக இலங்கை எடுத்த 260 ரன்களே நீண்ட காலமாக உலகக்கோப்பையின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இந்தியா 218/4: 2007 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா எடுத்த ஸ்கோர். யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த போட்டி.

தென்னாப்பிரிக்கா 229/4: 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எடுத்த ஸ்கோர். இருப்பினும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சேஸிங்கில் 200 ரன்கள்: உலகக்கோப்பை வரலாற்றில் 200 ரன்களுக்கு மேலான இலக்கை சேஸிங் செய்த அணிகள் என்ற பெருமை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு உண்டு.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.