"தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள்" – பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ‘Hindustan Times’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், “எனக்கு இந்தி எழுத, படிக்க, பேசத் தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு எனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறேன்.

ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா கசாண்ட்ரா

ஆனால் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள்.

திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினார்கள்.

இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

மும்பையில் பணியாற்றினாலும் எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளன” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.