பாகிஸ்தான் வெற்றி! உறுதியானது சூப்பர் 8 அட்டவணை! மீண்டும் இந்தியா vs பாக்?

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த சூப்பர் 8 சுற்றுக்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 4 குரூப்களில் இருந்தும் தலா 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source

 SUPER 8 SCHEDULE

21 Feb: NZ vs PAK
22 Feb: ENG vs SL
22 Feb: IND vs SA
23 Feb: ZIM vs WI
24 Feb: ENG vs PAK
25 Feb: NZ vs SL
26 Feb: WI vs SA
26 Feb: IND vs ZIM
27 Feb: ENG vs NZ
28 Feb: PAK vs SL
1 Mar: ZIM vs SA
1 Mar: IND Vs WI pic.twitter.com/FdNH0xxayD

— Johns. (@CricCrazyJohns) February 18, 2026

சூப்பர் 8 சுற்று: தேதிகள் மற்றும் இடங்கள்

சூப்பர் 8 சுற்று போட்டிகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 2 வரை நடைபெறவுள்ளன. இந்த சுற்றில் மொத்தம் 8 அணிகள் இரண்டு குழுக்களாக குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. இந்திய அணி குரூப் 1ல் இடம் பெற்றுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ஒரு குரூப்பிலும், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு குரூப்பிலும் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் அனைத்து சூப்பர் 8 போட்டிகளும் இரவு 7 மணிக்கு தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்தியாவின் போட்டிகள்

பிப்ரவரி 22 (ஞாயிறு): இந்தியா vs தென்னாப்பிரிக்கா (இடம்: அகமதாபாத், நரேந்திர மோடி மைதானம்) – இரவு 7:00 மணி. 

பிப்ரவரி 26 (வியாழன்): இந்தியா vs ஜிம்பாப்பே (இடம்: சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானம்) – இரவு 7:00 மணி.

மார்ச் 1 (ஞாயிறு): இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் (இடம்: கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ்) – இரவு 7:00 மணி. 

எந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?

குரூப் 1: இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள்.

குரூப் 2: பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை.

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி

சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதி மார்ச் 4ம் தேதியும், 2வது அரையிறுதி மார்ச் 5ம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 8ம் தேதியும் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர் 8 சுற்றின் ஒரு முக்கிய போட்டி பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிராக விளையாட உள்ளது. நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.