சென்னை: மாநில சுயாட்சிக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையை பேரவையில் வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கும் வகையில், இந்தியஅரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும், இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் […]