இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முகமது ஷமி எப்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காத என்ற கேள்விகளும் இருந்து வருகிறது. காரணம் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். கணுக்காலில் காயம் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருந்தார். அதன் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து அவரது பழைய பார்ம் இல்லை என்பதால் அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
Add Zee News as a Preferred Source

உள்ளூர் போட்டி!
சமீபத்தில் பெங்கால் அணிக்காக சிறப்பாக பந்துவீசி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் முகமது ஷமி. அவரது பழைய வேகம் இல்லை என்றாலும், நல்ல எக்கனாமி ரேட்டில் வந்து வீசி உள்ளார். இதன் காரணமாக 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பை அணியில் ஷமி இடம் பெறுவாரா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் வேக பந்து வீச்சாளர்கள் அணிக்கு தேவை. இருப்பினும் ஷமி இடத்தில் தற்போது பல வீரர்கள் போட்டி போட்டு வருவதால், அவருக்கான வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது.
தொடர்ந்து வாய்ப்பு மறுப்பு!
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஷமி இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் இடம் பெறாமல் போனது பலருக்கும் வருத்தத்தை அளித்தது. இருப்பினும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் முகமது ஷமி. அவரது உடற்தகுதியும், பந்து வீச்சு திறனையும் தேர்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தற்போது பல இளம் வீரர்களும் இடம் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஹர்ஷித் ராணா கடந்த ஓர் ஆண்டுகளாக இந்தியாவிற்கு அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதே சமயம் சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா போன்றவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இப்போது உள்ள இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவும் ஷமி இடம் கேள்விக்குறியாகி.

இஷான் கிஷன்
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த இஷான் கிஷன் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று, தனது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரின் பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றியை தீர்மானித்தது. ஆனாலும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்ட வருடாந்திர சம்பள பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. டி20 உலக கோப்பை முடிந்த பிறகு இந்திய அணியில் அவர் பெறுவாரா மாட்டாரா என்பது தீர்மானிக்கப்படும். இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே அந்த இடத்திற்கான போட்டியும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்கள்களுக்கு கூட டி29 உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு போட்டி நிலவி வருகிறது.
About the Author
RK Spark