IND vs NED: நெதர்லாந்துக்கு எதிரான போட்டி.. இந்தியா பிளேயிங் XIல் 4 முக்கிய மாற்றங்கள்!

India Predicted Playing XI Against Netherlands: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி லீக் ஆட்டத்தில் முதலில் அமெரிக்காவுடன் விளையாடி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நமீபியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. 

Add Zee News as a Preferred Source

India vs Netherlands: இன்று நெதர்லாந்துடன் மோதும் இந்தியா 

இதையடுத்து லீக் ஆட்டத்தில் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்திய அணி இன்று (பிப்ரவரி 18) விளையாட இருக்கிறது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டதால், இப்போட்டியை ஒரு சோதனை ஆட்டமாகவே கையாளும் என கூறப்படுகிறது. அதாவது, அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என்றும் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

4 Key Changes In India Playing XI: இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள் 

1) அதன்படி, இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்படலாம். அவருக்கு பதிலாக முகமது சிராஜை அணிக்குள் கொண்டு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. ஜஸ்பிரித் பும்ராவை இப்போட்டியில் ஓய்வு கொடுத்து சூப்பர் 8 சுற்றில் தொடர்ந்து விளையாட வைக்க நிர்வாகம் யோசித்து இருக்கும். 

2) அதேபோல் மற்றொரு முக்கிய வீரரான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை எடுத்து வரலாம். ஏனென்றால், வரும் போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிகப்பெரியது. அதனால் அவரை இப்போட்டியில் இருந்து நீக்கும் முடிவில் இருக்கலாம். 

3) மூன்றாவதாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவர் அணியின் முக்கிய ஸ்பின்னர் என்பதால், வரும் போட்டிகளில் அவர் அணிக்கு முக்கியம். அதனால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம். 

4) நான்காவதாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. அவர் இத்தொடரின் தொடக்கத்தில் இருந்து வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். முதல் போட்டியில் விளையாடிய அவர் நமீபியா போட்டியில் இருந்து விலகி இருந்தார். அதன் பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்ற அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டக் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். ஆனால் அவர் அப்போட்டியில் முழுமையாக குணமடையவில்லை என்பது தெரிந்தது. அதனால் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கி வரும் போட்டிகளில் பயன்படுத்ததலாம் என தெரிகிறது. 

India Predicted Playing XI Against Netherlands: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிவம் துபே, முகமது சிராஜ், அக்சர் படேல் (துணை கேப்டன்), அர்ஷ்தீப் சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.