சென்னை: மறைந்த விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து, திராவிட மாடல் ஆட்சி தொடர, இணைந்து பயணிப்போம்; தே.மு.தி.க கட்சியை கூட்டணி வரவேற்று ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் உறுதி செய்து […]