வைபவ் சூர்யவன்ஷி 10ஆம் வகுப்பு தேர்வை எழுதாதது ஏன்…? – தந்தை சொன்ன தகவல்

Vaibhav Suryavanshi: ஐபிஎல் 2026 தொடர் இன்னும் ஒரு மாதக் காலத்தில் தொடங்க உள்ளது. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இதுவரை ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியாகவில்லை.

Add Zee News as a Preferred Source

2026 ஐபிஎல் சீசன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த 18 சீசன்களாக தொடர்ந்து விளையாடி வரும் தோனி, ரோஹித், விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் வரும் சீசனிலும் விளையாட உள்ளனர், தோனிக்கு இது கடைசி தொடராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு எடுத்த RR

அதைவிட, கடந்த சீசனில் அதிரடியாக விளையாடியும், 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடர்களில் சிறப்பாக விளையாடியவருமான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை எதிர்பார்த்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ரூ.1.10 கோடிக்கு கடந்த 2025 மெகா ஏலத்தில் எடுத்தார்.

அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷி

கடந்த ஐபிஎல் சீசனில் கடந்த 7 இன்னிங்ஸில் ஒரு சதம் உள்பட 252 ரன்களை சூர்யவன்ஷி அடித்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்ஸில் 439 ரன்களை குவித்தார். குறிப்பாக, இத்தொடரின் இறுதிப்போட்டியில் 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்ஸர் உள்பட 175 ரன்களை குவித்தார், அந்த இன்னிங்ஸ் யாராலும் மறக்க முடியாத இன்னிங்ஸாக அமைந்தது. இந்நிலையில், இந்த சீசனிலும் அவர் அதிரடியை தொடர்வாரா அல்லது அவரை யாராவது அடுக்குவார்களா என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

தேர்வு எழுதாத சூர்யவன்ஷி

இந்தச் சூழலில், வைபவ் சூர்யவன்ஷி இந்த வருடம் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை எழுத இருந்தார். பீகாரின் போடார் சர்வதேச பள்ளியில் பயின்று வரும் வைபவ் சூர்யவன்ஷி அங்குதான் 10ஆம் வகுப்பு தேர்வை எழுத இருந்தார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் (பிப். 17) தேர்வு எழுத வரவில்லை. 

இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் கூறுகையில், “அவர் இன்று தேர்வெழுதவில்லை, தேர்வு மையத்திற்கு வர் வரவில்லை. சிபிஎஸ்இ கொள்கையின்படி அவர் ஆப்சென்ட் என பதிவு செய்துள்ளோம். ஒரு மாணவர் வரவில்லை என்றால் ஆப்சென்ட் என்றே பதிவு செய்வோம். அவர் வந்து தேர்வு எழுதுவார் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அவருக்கு வேறு பல கடமைகள் உள்ளன. கிரிக்கெட் போட்டி இருக்கலாம் அல்லது பயிற்சி கூட இருக்கலாம். அடுத்த தேர்வை அவர் நிச்சயம் எழுத வருவார் என நினைக்கிறேன்” என கூறியிருந்தார்.

சூர்யவன்ஷியின் தந்தை சொன்னது என்ன?

வைபவ் சூர்யவன்ஷி ஏன் தேர்வை எழுதவில்லை என அவரின் தந்தை சஞ்சீவ் பதில் அளித்திருந்தார். அதில், “எனது மகன் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களுடன் நாக்பூரில் எனது மகன் பயிற்சியில் உள்ளார். இந்த வருடம் தேர்வு குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் தேர்வை புறக்கணிக்க அவர் முடிவு செய்துள்ளார், அடுத்த வருடம் தேர்வு எழுதுவார்” என பதிலளித்தார். 

“அவர் தேர்வெழுத சென்றாலும் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. அவர் பள்ளியில் தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்றாக படிக்கும் மாணவர் ஆவார். அனைத்து பாடங்களிலும் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பார், ஆனால் இப்போது கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்” என வைபவ் சூர்யவன்ஷி தேர்வு எழுதாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | தூபேவின் பேட்டிங் சிறப்பாக மாறியது எப்படி…? தோனி கொடுத்த முக்கிய டிப்ஸ்

மேலும் படிக்க | 14 வயதில் அசத்தும் வைபவ் சூர்யவன்சி.. அவரின் டாப் 10 சாதனைகள் இங்கே!

மேலும் படிக்க | வைபவ் சூரியவம்சிக்கு ஐசிசி தடை! இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.