சென்னை: சென்னை மாநகராட்சியில் தொடரும் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. மண்டலம்-2, வார்டு-16 இல் இருக்கும் TPP சாலையில் 17 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் மற்றும் கம்பங்கள் பொருத்தும் பணிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. தமிழ்நாடு ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மைச் சட்டம் – 1998 மற்றும் விதிகள் 2000 சட்டம் முழுமையாக மீறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகம், தெரு விளக்கு ஒப்பந்தத்தை M/s Narayan & Co நிறுவனத்திற்கு கொடுக்க […]