பதிரானாவுக்கு காயம்… பலவீனமாகும் பௌலிங் – KKR குறிவைக்கும் 3 வீரர்கள்!

IPL 2026, Matheesha Pathirana Replacement: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் மார்ச் 8ஆம் தேதி நிறைவடையும் நிலையில், மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

முக்கிய வீரர்களை தூக்கிய கேகேஆர்

கடந்த மினி ஏலத்தில் கொல்கத்தா அணி அதிக பர்ஸ் தொகையுடன் வந்து, பல முக்கிய வீரர்களை அதிக தொகை கொடுத்து அள்ளியது. கேம்ரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கும், மதீஷா பதிரானாவை ரூ.18 கோடிக்கும், முஸ்தபிஷூர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கும் கேகேஆர் அணி எடுத்திருந்தது. மேலும், பின் ஆலனை ரூ.2 கோடிக்கும், டிம் சைஃபர்டை ரூ.1.50 கோடிக்கும் எடுத்து கேகேஆர் பலமான ஸ்குவாடை கட்டமைத்தது.

இரண்டு பௌலர்கள் பிரச்னை

ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக வங்கதேச வீரரான முஸ்தபிஷூர் ரஹ்மானை விடுவிக்க வேண்டிய கட்டாயம் கேகேஆர் அணிக்கு ஏற்பட்டது, இதனால் அவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், கேகேஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா, டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகினார். ஐபிஎல் தொடருக்கு திரும்புவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

பதிரானா, முஸ்தபிஷூர் பேக்அப் யார்?

ஏற்கெனவே, கேகேஆர் அணியில் பந்துவீச்சு பலவீனமடைந்திருக்கும் நிலையில், மதீஷா பதிரானாவும் தற்போது காயத்தில் சிக்கி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகி உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா அல்லது விளையாடினாலும் அவரால் முழு உடற்தகுதியுடன் முழுமையாக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது பேக்-அப் முஸ்தபிஷூர் ரஹ்மானும் தற்போது இல்லை. ஹர்ஷித் ராணாவுக்கு பேக்-அப்பில் கார்த்திக் தியாகி, ஆகாஷ் தீப், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், பதிரானாவுக்கு பேக்-அப் வீரர் மற்றும் முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு மாற்று வீரரும் தேவைப்படும். அந்த வகையில், கேகேஆர் அணி இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் எனலாம். 

பிளெஸ்ஸிங் முசரபானி

ஜிம்பாப்வே அணி வீரரான இவர் கடந்த 2025 சீசனில் ஹேசில்வுட்டுக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியில் இடம்பெற்றார். ஆனால் ஒரு போட்டியில் கூட இவர் விளையாடவில்லை. அதேநேரத்தில், மினி ஏலத்திலும் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் சிறப்பாக விளையாடி, 3 போட்டிகளில் 9 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். ஆனால் இவர் இதுவரை நடப்பு தொடரில் இலங்கையில் மட்டும்தான் விளையாடியிருக்கிறார். வரும் சூப்பர் 8 சுற்றில்தான் ஜிம்பாப்வே இந்தியாவில் விளையாட உள்ளது. இதில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் கேகேஆர் இவரை தட்டித்தூக்கும். 

பசல் ஃஹக் பரூக்கி

இவர் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கத்தா இவரது பந்துவீச்சும் எடுபட அதிக வாய்ப்பில்லை. இருப்பினும் முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு ஏற்ற பேக்-அப் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவார், எனவே இவர் பெஸ்ட் ஆப்ஷன். இந்தியாவில் இவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது.

அல்சாரி ஜோசப்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் மேற்கு இந்திய தீவுகள் அணியில் தற்போது இவர் விளையாடவில்லை என்றாலும், இவர் கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாகவே பந்துவீசியிருக்கிறார். புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் கேகேர் அணிக்கு இவர் பலம் அளிப்பார். இருப்பினும் இவர் பதிரானாவுக்கு பேக்-அப் பந்துவீச்சாளராகவே இருப்பார்.

மேலும் படிக்க | தூபேவின் பேட்டிங் சிறப்பாக மாறியது எப்படி…? தோனி கொடுத்த முக்கிய டிப்ஸ்

மேலும் படிக்க | தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் கவுதம் கம்பீர்? புதிய ஆபர்!

மேலும் படிக்க | ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் ஆப்பு… ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அறிவிப்பு!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.