சென்னை: பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் குறித்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், நீதிமன்றத்தின் நடவடிக்கை பாமக நிறுவனர் ராமதாசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாமகவை கைப்பற்றுவதில், தந்தை மகனுக்கு இடையே மோதல் எற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் தான் பாமக என்று […]