டி20 உலக கோப்பை தொடரில் குரூப் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. அடுத்ததாக சூப்பர் 8 போட்டிகள் தொடங்க உள்ளன. இந்திய அணி தங்களது அனைத்து குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தங்களது முதல் சூப்பர் 8 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. இந்திய அணி 4 குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சற்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தன்னுடைய கணிப்பை தெரிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
*UNBEATEN. UNSTOPPABLE & UMMATCHED*
Which of Team India’s *SUPER 8* match are you most excited for?
IND vs SA | SUN, 22 FEB, 6 PM
IND vs ZIM | THU, 26 FEB, 6 PM
IND vs WI | SUN, 1 MAR, 6 PM
*ALL OF THE ABOVE* pic.twitter.com/FevvRjUPdP
— वर्माarma (@SMDVarma) February 20, 2026
இந்திய அணியில் என்ன மாற்றம்?
இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களது இடத்திற்கு சரியாக பொருந்தி உள்ளனர், இதன் காரணமாக அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு வீரரை மட்டும் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் நிலை?
வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பது ஒன்பதாவது இடத்திலும் ஒரு பேட்டர் இந்திய அணிக்கு கிடைப்பார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் அவரது பந்துவீச்சு அணிக்கு தேவையான ஒன்று என்றும், தென்னாப்பிரிக்க அணியில் இடதுகை வீரர்கள் நிறைய பேர் உள்ளதால் அவர்களுக்கு எதிராக பந்து வீச வாஷிங்டன் சுந்தர் துருப்புச் சீட்டாக இருப்பார் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் உத்தேச அணி
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி.
சூப்பர் 8 சுற்று விவரம்
சூப்பர் 8 சுற்றில் இந்தியா குரூப் 1 பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன. பிப்ரவரி 22 அன்று அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்தியா. அதன் பிறகு பிப்ரவரி 26 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது. குரூப் 1-ல் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் வெற்றி இந்தியாவுக்கு மிக முக்கியமானது.
About the Author
RK Spark